Saturday, March 3, 2007

மலடியின் குழந்தை

மலடியின் குழந்தை:

என் அன்பு மகனுக்கு..

நித்தம் நித்தம்
நித்திரை தொலைத்து
நித்தமும் உனை நினைத்திருக்கும்
நிம்மதி அற்ற தாய் எழுதுவது..

எப்போது வருவாய் நீ??

உன்னை "சுமக்க" வேண்டும் என வர மறுக்கிறாயா??
நான் உன் "சுமை" தாங்கி அல்லடா
நான் உன் "சுகம்" தாங்கி..

தட்டச்சிலும்,கரண்டியிலும் தேய்ந்த
இவ்ரேகைகள்
உந்தன் பஞ்சனை தேகத்திலும்
கொஞ்சம் தேயட்டுமே..

இந்த பூமியில்(கருவறை) பிறக்க
உனக்கு வளம் போதவில்லையா??
காய்ந்த நிலத்திலும்
கள்ளிச்செடி வளர்கிறதே??

நீ வரும் வரை
என் கருவறையும் என்க்கு கல்லறையே..
வருகை தா..
என் கருவறைக்கு ஒரு முகவரி தா..
பால் பொங்க(வாந்தி)வரவேற்கிறேன் உன் புது அறைக்கு..

நீ என் கண்ணில் உள்ள கருவிழி..
நீ இல்லாமல் என் கண்களுக்கு அழகேது??
என் கருவறையும் இப்போது அப்படியே??

உன் பிஞ்சு சினுங்கல் வேண்டும்..
நீ முட்டி மோதி பால் உண்ணும் சுகம் வேண்டும்.
.இரவெல்லாம் விழித்து காக்கும் அந்த சுகதுன்பம் வேண்டும்..
உந்தன் மழலைக் கதறல் வேண்டும்..

அடுத்த கடிதம் உன் புது அறையில் வந்து பெற்றுக்கொள்..

இப்படிக்கு..
உன் வருகைக்கு காத்திருக்கும்..
மலடித்தாய்..

No comments: