Saturday, September 18, 2010

திமிர் பிடித்தவள்.. 2

ஏய் விடு!!
முடியாது,நான் உனக்கு நகச்சாயம் பூசினால் என்ன?
"அய்யோ விடு,யாரவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்" என்றாய்,
"நிலவிற்க்கு வண்ணம் அடிப்பதாய் நினைப்பார்கள்" என்றதும்
வண்ணம் பூசாமல் சிவந்தது உன் முகமும்..

என்ன டா பண்ற?
உன்னை காதலித்துக் கொண்டிருக்கிறேன்..
உனக்கு வேற என்ன தான் தெரியும்??
உன் மை விழி பார்வையில் தொலைந்து போகத் தெரியும்..
உன் தமிழ் பேசும் அழகிய உதடுகளில் உறங்கிப் போகத் தெரியும்..
உன் அலை அலையான கூந்தலில் மிதந்துப் போகத் தெரியும்...
அப்புறம்?
இப்படி அழகாய் பொய் சொல்லத் தெரியும்..
அடப்பாவி..

கண்டிப்பா வேடந்தாங்கல் போகனுமா என்றேன்..
ஏன் என்ன ஆச்சு?என கலக்கத்துடன் கேட்டாய் நீ..
பிறகு அங்கே வரும் ஆண் பறவைகள் எல்லாம்
உன்னை பார்த்து இது எந்த ஊர் பறவை என ரசிக்கத் தொடங்கிவிட்டால் நான் என்ன செய்வது..??

துணி உலர்த்திக் கொண்டிருந்தாய் நீ..
என்ன அப்படி பார்க்கிறாய் என்றாய்..
இல்லை தேவதைகளெல்லாம் இப்படித் தான்
சாரலை தந்து விட்டு,
வண்ண ஆடைகளை வானவில்லாய் உலர்த்துகின்றதோ என்றேன்..
கொஞ்சம் வானவில்லை வெட்கத்துடன் என் மேல் எறிந்து விட்டுப் போனாய்..


காதலன்:எங்கே போகிறாய்?
காதலி:காக்கய்களுக்கு அன்னம் வைக்க?.
காதலன்:சரி ஜாக்கிரதை
காதலி:ஏன்?..
காதலன்:இல்லை,ஒரு தேவதை நம்மை அழைக்கிறது என்று,
பறவைகளும்,குருவிகளும்,வண்ணத்து பூச்சிகள் எல்லாம் வீடு தேடி வந்து விட போகிறது..
காதலி:போடா..

Thursday, August 19, 2010

அவசர வாழ்க்கை..

காலம் என்னிடமிருந்து களவான்ட
நிமிடங்களை நினைத்து பார்க்கிறேன்..

அஞ்சல் வழியில் கதைகள் பேச கால
அவகாசம் கிடைப்பதில்லை இன்று..

கண்ணீர் வெளியேற நகைத்த புன்னகை
கிடைப்பதிலை இன்று...

கண்ணீர் துடைக்க கைகளும் நேரம் காலம்
பார்க்கிறது இந்நாளில்..


என்றோ ஒரு நாள் காலத்தோடு போராடி தோற்று,
வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுது,
நீ அவ்வழியே கடந்தால் ,சிறு புன்கையேனும்
தந்துவிட்டுப் போ..

உன்னோடு வாழ்ந்த சிறந்த சில நாட்களை நினைத்து
மறைந்து விடுவேன்..

கிட்டுவாகிய நான்...

என்னை நினைவிருக்கிறதா?
மறந்திருப்பாய்..
புதிய நட்பும்,
புதிய உறவுகளும்
உன் கண்னை மறைத்திருக்கும்..
நிறம் மாறும் மனிதர்களில்
நீ மட்டும் என்ன விதிவிலக்கா?

உன்னை அரை நிர்வாண கோலத்தில் பார்த்த
ஒரு சில உயிர்களில் நானும் ஒருவன்..

உன் இதழ் வருடிய காயங்கள் மாறா
இதயம் கொண்டவன்..

அப்போதெல்லாம் இடி மின்னலெனில் உனக்கு பயம்,
அத்தருணத்தில், என்னை இறுக்கி கட்டிக் கொண்டு உறங்கி இருக்கிறாய்..

சில நேரங்களில் உன்னை அழவைத்துப் பார்பதில் ஒர் இன்பம் எனக்கு,
என்னை காணாமல் தேடி அலையும் உன் கால்களை முத்தமிட தோன்றுமடி எனக்கு..

என்னோடு சேர்ந்து சிரித்தாய்..
என்னோடு சேர்ந்து அழுதாய்..
என்னுடய நேரம் எல்லாம் உன் மடி மீது உறங்கியது..
உன்னுடய நேரம் எல்லாம் என்னை அனைப்பதில் நனைந்தது..

காலம் கரைபுரண்டோடியது..
விதி எழுதிய தீர்ப்பில் நான் அகப்பட்டேன்..
உன் விரல் பிடித்த கைகள் இன்று,
தெரு நாய்களின் விளையாட்டுப் பொம்மையாய்..
ஊனத்திற்க்கு உலகம் தந்த பரிசாய்
நானும்,என் எதிர்க்காலமும் ஒர் மூலையில் ஒதுக்கப்பட்டோம்..

அன்று ஒரு நாள் உன்னை எதேச்சையாக
சந்திக்க நேர்ந்தேன்...
பிரிவின் மிகுதியில்,
காதலின் வலியில்
எனை வாரி அனைத்துக் கொல்வாய் என நினைத்தேன்..
ஆனால் எனக்கு கிடைத்ததோ
உன் அலட்சிய பார்வை மட்டுமே..

இன்று இந்த உலகமும்,
உன் அன்னையும் எனக்குத் தந்த பெயர்
"வேண்டா பொருள்"..

பரவாயில்லை,
உன் அன்னை தானே..

நான் உன்னை பிரிவதற்க்கு முன்,
இறுதியாய் ஒன்று,
அடுத்த பிறவியிலும்,
மீண்டும் உன் அன்பிற்குறிய
கிட்டு பொம்மையாகவே பிறக்க ஆசை..
அப்படி நேர்ந்தால்,
எப்போதும் போல் என்னை கட்டி அணைத்து
முத்தம் தருவாயா?
நான் சொல்வது எவையாவது உனக்கு கேட்கின்றதா??

அடுத்த சில மணித்துளிகளில்..
ஏதோ ஒர் வீதியில்,
அய்!!!! பொம்ம!!!
என்ற ஓசையுடன் இரு கரங்கள்,கிட்டுவை அரவணைத்தது..
சோப்பு நுறை காணா அவள்
பாவடை சட்டை கொண்டு,
கிட்டுவின் மேல் படிந்திருந்த
தூசியை துடைத்தாள்..
இல்லை இல்லை
கிட்டுவின் கண்ணீரைத் துடைத்தாள்..

கடவுளிடம் சில கேள்விகள்..

இன்று காலை..
என் போர்களம் செல்ல
ஆயத்தமாகி,ரயில் பயணத்தில் நான்..

அங்கே,
இருக்கைகளுக்காக காத்திருக்கும் கண்கள் சில..
காதலுக்கு கடன் கொடுத்த காதலர்கள் கண்கள் சில..
செய்தித்தாளில் தொலைத்த் கண்கள் சில..
உறக்கத்தில் ஒளிந்து கொண்ட கண்கள் சில..

சிறகு விரித்து பறந்த மின்சார ரயிலின்,
காதை செல்லமாய் திருகி நிறுத்தினார் அதன் ஓட்டுனர்..

பூக்களுக்கு போட்டியாய் பிஞ்சு பாதங்களும்,
வாழ்வோடு போராடும் சில இளைஞர் பாதங்களும்,
அனுபவம் சொல்லும் முதிர்ந்த பாதங்களும்,
கரை சேர்ந்தன...

மீண்டும் பறந்தது மின்சார ரயில்..
சட்டென்று ஒர் ஓசை..
ஓசை வந்த திசை நோக்கி எல்லோர் கண்களும்..

தலையில் சிவப்பு தொப்பி,
அழகாய் ஒரு முழுகால் சட்டை,
பால்குடி மாறா உதடுகள்..
பார்த்தால் அள்ளி அணைக்க தோன்றும்
ஒர் 4 வயது சிறுவன்..

அவன் எதிர் திசையில்,,
உலகம் அறியா ஓர் முகம்..
மழலை மொழி மறக்காத உதடுகள்..
பொம்மைகளோடு மட்டும் சினேகம் வைத்துக்
கொள்ள துடிக்கும் வயதில் ஒர் சிறு பெண்..
அவன் உடன் பிறந்தவளாய் இருக்கக் கூடும்..

அவள் அன்னையின் தாளத்திற்க்கு ஏற்ப,
உடலை அசைத்தான் அச்சிறுவன்..
தன் வாழ்வை போல் தன்னையும் ஓர்
வளையத்துக்குள் அடைத்துக் கொண்டாள் அச்சிறுமி..
அதிலிருந்து லாவகமாய் வளைந்து வெளியேறவும் செய்தாள்..
அவள் வயதிற்க்கு ஒத்தாத வித்தைகள் பல செய்தாள்..

தாளம் நின்றது..
அரங்கேற்றமும் முடிந்தது..
எழுதுகோல் பிடிக்க வேண்டிய அவள் விரல்கள்,
பிச்சை பாத்திரம் தொட்டது..
அ ஆ வன்னா உச்சரிக்க வேண்டிய அவன் உதடுகள்,
யாசகம் கேட்கத் தொடங்கியது..

சிலர் உடல்களை தொட்டு,
அவர்கள் மனம் தொட முயற்ச்சித்தனர் அவ்விருவர்..
வேடிக்கை பார்த்த சிலர்,
கடலில் முத்தெடுப்பது போல் தேடிப் பிடித்து
ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் நாணயமென இடத்தொடங்கினர்..
சில்லரை சத்தங்கள் அவர்கள் அன்னையின்
காதுகளை குளிர்வித்தது..

வாழ்வில் முன்னேற ஆயிரம் வழிகள் என
ஆயிரம் புத்தகங்கள்..
குழந்தைகளை பயன்படுத்தாமல் பிச்சை எடுக்க ஆயிரம் வழிகள் என
யாரேனும் புத்தகம் எழுத யாரும் இல்லையா??

ஒரு தொழில் செய்து என் சம்பாத்தியம்
என் தந்தைக்கு உதவி செய்ய
24 ஆண்டுகள் ஆயின,
அதை 3 வயதில் செய்ய முனையும் இவனை,
படைத்த கயவன் யார்?

ஒர் உயிர் கொடுக்க மறந்தோ,மறுத்தோ
ஓராயிரம் பெற்றோர்கள் இங்கிருக்க,
அவள் குழ்ந்தையின் பசி தீர்க்க முடியாத
இந்த அன்னைக்கு கொடுக்காமல் மறந்திருக்கலாம் அல்லவா?

இப்படி வாழ கற்றுக் கொடுத்தவன் எவனோ,
அவனே அவர்களுக்கு மாறி வாழ,மாற்றி வாழ
கற்றுக் கொடுத்தால் என்ன?

ஒர் இரவில் செய்த குற்றத்திற்காக,
இரு வாழ்வை தூக்கிலிடும்
தீர்ப்பைச் சொல்லியவன் யார்?

எனக்குள் எழுந்த கேள்விகள்,
அவ்வன்னைக்கும் எழுந்தால் என்ன?

இப்படியாய் ஆயிரம் கேள்விகள் எழ தொடங்கிய நேரத்தில்,
ஒர் குறவ பெண் கண்ணில் தென்பட்டால் கையில் ஒர் குழந்தையுடன்..
எதோ ஒர் பொருளை விற்று பணம் ஈட்டிக் கொண்டிருக்க,
இவ்விரு அன்னைக்கும் என்ன வித்தியாசம் என மற்றும் ஓர் கேள்வி எழ,
என் நிறுத்தம் வந்தது..

கூட்டத்தில் மறைந்து தொலைந்தது,
என் கேள்விகளும்..
என் கால்களும்..

கரையோரம் ஒதுங்கிய கவிதைகள்..

உன் ஓர விழி பார்வையில்
வழிந்தோடும் காதலை,
ஒரு போதும் நான் தவறவிட்டதில்லை..

நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் நம் கண்கள்..
அப்போது வெளியேறும் கண்ணீர்
பூமியில் தடம் பதிக்கும் முன்
என் இதழ்கள் அதனை இடம்பெயர்க்கும்..

அப்படி முறைத்து பார்க்காதே..
என்னால் இன்றும் தமிழோடு மல்லுக்கட்ட முடியாது,
உன்னை பற்றி கவிதை எழுதுவதற்க்கு..

ஒரு நாள் உனை வழிமறித்து
முத்தம் ஒன்றை பெற்றுக்கொண்டேன்..
உன்னை வழிமறிக்க வேண்டுமென்றே
இப்போதெல்லாம் தனியாய் வருகிறாயோ??

தனிமைக்காய் உறவுகளை விரட்டியடித்து,
நம் இடைவெளி குறைக்கையில்,
உறங்கிய கவிஞன் விழித்துகொள்கிறான்..
இவனை எப்படி விரட்டி அடிப்பது..??

அலை அலையாய் தமிழ் சொற்க்கள்
அங்கும் இங்கும் அலைந்தோட,
கவிதையாய் மாறி கரை ஒதுங்கியது
உன் பாதம் கண்டவுடன்..

உறவுகளுக்கு இடையில் வளைந்தோடி,
தேடி அலைந்து தம்மைதம் இணைத்துகொண்டது நம் கண்கள்,
அழகாய் தெரிந்தது நம் காதல் கோலம்..

உன்னைப் பற்றி எனக்கு முன்
ஒருவன் கவி எழுதி வைத்துள்ளான்..
உன் உதட்டு வரிகளைத்தான் சொல்கிறேன்..

நான் படித்த சிறந்த சில வரிகளில்
உன் உதட்டு வரிகளும் அடங்கும்..

புத்த்கம் படிப்பதை நிறுத்திவிட்டேன்,
உன்னைப் படிக்க தொடங்கிய நாளிலிருந்து..

நீ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய்..
புத்தகம் உன்னை படித்துக் கொண்டிருந்த்து..
நீ பக்கங்களை திருப்புகையில்,
அதன் அழுகுரல் என் காதுகளில்..

அப்பா

சில ஆண்டுகளுக்கு முன்னால்,
பத்து மாத உறக்கம் களைந்து,
பூமி தொட்டது இந்த பாதங்கள்..
"அப்பா பாரு டா செல்லம்",
என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினாள் அம்மா..

தடித்த மீசை,
கறுத்த தேகம்..

அனுபவங்களை சில வரிகளில்
சொல்லி முடித்திருக்கும் முகச்சுருக்கங்கள்..

கறுத்த வானில் மின்னல் கீற்றாய்,
ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் நரை முடி..

ஐம்பதை முத்தமிட்டு,
நெஞ்சுயர்த்தி நடைபோடும் வயது..

இவை யாவும் அவரது இப்போதைய அடையாளங்கள்...

நடு நிசியில் உறக்கம் தொலைத்து,
கண்ணீரில் கலவரம் செய்தேன்..
அவர் உறக்கத்தையும் ,தோள்களையும் கடனாய் தந்தார்..

இடப்பக்கம் வகுடுடெத்து,
வலப்பக்கம் படிய வைத்து,
தலை வாரக் கற்றுக்கொடுத்தது அவர் கைகள்..

மென் பொருளை பதம் பார்க்கும் இக்கைகள்,
இன்று சேற்று மணலில் நனைந்து இருக்கும்,
அவர் தந்த கரும்பலகை இல்லையேல்..

பூமி தொடுகையில்,
கண்ணீரை தவிர வேறொன்றும்
என்னிடம் இல்லை..
ஆம்,எனதென்று சொல்லிக் கொள்ள இங்கே எதுவும் இல்லை,
என்னில் உள்ளவையெல்லாம் அவரால் என என்றும் அவர் சொல்லியதும் இல்லை..

நான் உடுக்கும் வண்ண ஆடைகளின் பின்னில்,
சில வியர்வை படிந்த அவர் ஆடைகள் அலக்கப்பட்டிருக்கிறது..

நாகரீக சூழலில் நான் நிற்க,
நகரத்து நெரிசலில் அவர் குடுங்கினார்..

கண்கள் அறியா காயங்களும்..
சொற்களாய் மாறாத ரணங்களும்,
அவரது ஏதோ ஒரு நாடித் துடிப்பில்
ஒலித்து கொண்டு தான் இருக்கின்றது..

சட்டென்று கலைந்தது கனவு..
விரைந்தது கால்கள்,
முதியோர் இல்லம் நோக்கி..
எல்லாம் உணர்ந்தேன்..
நாளை நானும் ஒரு தந்தை ஆகப் போகிறேன்
என அறிந்த பின்னர்..

திமிர் பிடித்தவள்.. 1

வர வர உடம்பு ரொம்ப மோசமாகிகிட்டே போகுது..
ஏன் என்ன ஆச்சு என என் விரல் பற்றி வினவினாள்..?
உன் பார்வைக்குள் சிறைபடுவதை
வாடிக்கையாய் கொண்டுவிட்ட தசைகளை
வேறு என்னவென்று சொல்வது??என முடித்தவுடன்,
எங்களிடையில் சிறிது இடைவெளி மிச்சம் இருந்தது..

நான் அள்ளி அணைக்க,
அவள் விலகி ஓட,
ஏய் திமிர் பிடித்தவளே நில் என்றேன்..
கேள்விகளோடு எனைப் பார்த்த அவளிடம்,
தினமும் திமிறும் அழகை ஆடைக்குள் அடைப்பவளை
வேறு என்னவென்று அழைப்பது என முடித்த கணத்தில்,
அவளது மொத்தத் திமிறும் எனை சுற்றிக்கொண்டது..

ஒரு நாள் உன்னிடம்,
இந்த உலகில் உனக்குப் பிடித்த இடம்
என்னவென்று கேட்டேன்..
நீ பதிலேதுமின்றி,
என் தோள் மீது சாய்ந்து எனை அணைத்த பொழுது,
என் காதலின் கணம் கொஞ்சம் கூடிப் போய் விட்டது..

என் ஜலதோஷம் உன்னை
தொற்றிக்கொள்ள வேண்டாமென
தனியே உறங்க முடிவெடுத்தேன்,
உன்னை பிடித்த எல்லாவற்றிற்க்கும் என்னையும் பிடிக்கும்,பிடிக்கட்டும் என
என் தோளில் நீ சாய்ந்த பொழுது,
உனக்கு காதல் தோஷம் பிடித்திருப்பதை உணர்ந்தேன்..

ஏன் இப்படி பார்க்கிறாய்? என்றாய் நீ
இல்லை தன்னை தானே ஆடை என்னும் ஜாடிக்குள்
அடைத்துக் கொள்ளும் அழகென்னும் பூதத்தை இப்போது தன் பார்க்கிறேன் என்றேன்..
போதும் உன் கற்ப்பனைப் பேச்சு..
எங்கே அதனை சத்தங்கள் இன்றி வெளியேற்றிவிடு பார்ப்போம் என நீ வம்பிழுத்தவுடன்,
என் முத்தஙள் உன்னை வெளியேற்ற தாமதிக்கவில்லை..