Tuesday, April 28, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பல ஆண்டுகளுக்கு முன்னால் விதைத்த விதை,

இன்று உன் உருவில் மரமாய் நிற்க,

உன் நிழலில் குளிர் காயும் உன் நூறு நண்பர்களில் நன்றி மறவாமல்

வாழ்த்து கூற வரிசையில் காத்து நிற்க்கும்

நானும் என் வார்த்தைகள் இங்கே..



நள்ளிரவு நேரம்..

ஊர் உறங்கும் சமயம்..

உனக்காய் கவிதை எழுத துடிக்கும்

என் கரங்களுக்கு,தமிழும் உதவி செய்ய..

தங்க மடல் ஒன்றை தரை மீது வைக்கிறேன்..



ஓய்வு எடுத்த கதிரவன்

மெல்ல எட்டி நின்று உனை பார்க்க..

இன்று பூக்க மறுத்த பூக்கள் எல்லாம்,

நாளை உனக்காய் மலர்ந்திட..

சோம்பல் முறித்து தொடங்கி விடு

உன் புதிய ஆண்டை..



இயற்கையின் நியதியில்,நானும் வேறல்ல என உறக்க சொல்லி

பூமி மிதித்த ஓர் உயிரே..

உன்னை நேசிக்கும் உயிர்கள் எல்லாம்

உன் நினைவில் வந்து போகும் தருணம் இது..

வாலிபம் போகிறது என நாசுக்காய் சொல்லும் தினம் இது..

உன் நாடக மேடையில் இன்று

புதுதாய் ஓர் அரங்கேற்றம்..



உனக்காய் உரிமையோடு சில வார்த்தைகள்..

சிறகு விரித்து பறந்து விடு..

சிந்தனைக்கு வழி விடு..

புன்கையின் கணக்கை கூட்டிக்கொள்..

காலம் கடந்து செல்ல வழி விடு..

வாணளாவு கனவு காண்..

கடலளவு அதை நிறைவேற்று..

ஓய்ந்து போகாதே,

உயரங்கள் இனியும் உண்டு,பயணங்கள் பலவும் உண்டு..

நாட்களை அத்தியாயங்கள் ஆக்கு..

வருடங்களை காவியங்கள் ஆக்கு..

கண்ணீர் கரை ஏற்று..

கர்வம் கொள்..

உறவுகளில் கரைந்து போ..

மகிழ்ச்சியில் மறைந்து போ..



இன்றோடு ஓர் ஆண்டில்,

வாழ்வோடு போராடி,எவ்வாறு சிதறி போவோம் என அறியாத போதும்,

இனி உரிமையோடு வாழ்த்து சொல்ல,

இனியொரு ஆண்டும் கிடைக்கும் என உறுதி இல்லை..

காலத்தோடு சுழன்று மீண்டும் நாம் சந்திப்போம் ஆயின்

அடுத்த ஆண்டும் உறிதியாய் வருவோம் நானும் என் கிறுக்கல்களும்..

இப்படிக்கு ,

பிரேம் குமார்