Monday, June 4, 2007

வறண்ட தேசம் ..

இப்ப கம்ப்யூட்டர் ,மென்பொருள் எல்லாம்
கடை வீதி பொருளாச்சு..
அரிசியும்,கோதுமையும்
கண் காணா பொருளாச்சு..

நெலத்துக்கு பாய்ச்ச தண்ணீ இல்ல,
நா வறண்டு போகும் என் நெலத்தப்பாத்து
என் கண்ணீர தான பாய்ச்சனும்..

சொந்த பந்தம் எல்லாம் பொலப்புக்கு
வேற ஊரு போக..
என்ன பெத்த ஆத்தா இந்த ஊரு
அத விட்டு போக நான் என்ன பட்டணத்து
கம்ப்யூட்டர் மனுஷனா??

கஷ்டமுனா ,சந்தோஷமுனா
சொந்தமுனு சொல்லிக்க ஆயிரம் பேர் இருந்தாங்க..
இனி என் புல்லைங்களும் தூரத்து சொந்தமா மாறிடுமோனு
பயம் வந்துடுச்சு..

தொழிற்சாலையெல்லாம்
ஊருக்குள்ள காலடி எடுத்து வெக்க
மரமெல்லாம் மிதிச்சு கொன்னுபுட்டீங்க..
அந்த கோவத்த தான் சூரியன் காட்டுதுனு
உனக்கு வெலங்கலயா??


அந்தி சாயிர நேரத்துல
ஆலமரம் கீழ தலை சாய்வேன்,
அது காத்தோட , தாலாட்டு பாட
கண் அசந்து நான் தூங்குவேன்..
இனி என் புல்லைங்களுக்கு
காத்து வாங்கவும் காசு கொடுக்கனுமோ??

இனி
தாய்பாலும்,
தாலாட்டும்
தடம் தெரியா வார்த்தையா போனாலும்
ஆச்சர்ய பட இங்கு இல்ல..

அணை கட்ட வந்தவங்க
அடிச்சு போட்டு போயிட்டாங்க..
பாலம் கட்ட வந்தவங்க
பள்ளம் தோண்டி தந்தாங்க..
தொழில் தொடங்க வந்தவங்க
பள்ளத்துல தள்ளியும் விட்டாங்க..
இன்னும் கொஞ்ச நாள்ல என் நாடி எல்லாம்
ஓஞ்சு போய் நான் இறப்பேன்..
அந்த 6 அடி 3 அங்குலம் ஆது என் புல்லைங்களுக்கு
முழுசா தருவீங்களா??

Sunday, June 3, 2007

மனித உணர்ச்சிகள்..

மனிதன் - கடவுளின் படைப்புகளில் சிறந்த படைப்பு.
அவனிடமிருந்து வெளியேரும் உணர்ச்சிகள் ஏராளம்.
அவற்றின் காரணங்கள்,தன்மை ஏராளம்.அவற்றில் சில..

சிரிப்பு:
மகிழ்ச்சியின் வாசற் கதவு..
இலவசமாய் கிடைக்கும்
விலைமதிப்பற்ற நகை..
விருந்தாளியின் வரவேற்பறை..
நோய்களின் களித்தல் கணக்கு..
ஆயுளின் கூட்டல் கணக்கு..
கூட்டாளிகளுடன் சேர்ந்தால் பேசும் ஒரே மொழி..

கோபம்:
மனிதனின் எரிமலை சீற்றம்..
எதிர்பார்ப்பின் எதிர்ப்பு..
உரிமையின் இருப்பிடம்..
கண்டிப்பின் கானம்..
ஆளைக்கொல்லும்
சொந்த வீட்டு உறவுக்க்காரன்..

கண்ணீர்:
துக்கத்தின் அணைப் பெருக்கு..
குழந்தையின் காலிங் பெல்..
சகரா(sahara) பாலைவனத்தில் மழை..
புத்திக்கும் ,மனத்திற்க்கும்
போர் நடந்து,மனம் வென்று
போரில் வெளியேரும் குருதி..

மெளனம்:
உணர்ச்சியற்ற் உணர்ச்சி..
அயிரம் அர்த்தம் கொண்ட மொழி..
சில நேரங்களில் இந்த சொற்களுக்கு
வலு அதிகம்..
ஊடலின் தேசிய மொழி..
மனம் ஓய்வெடுக்கும் அறை..
கண்கள் மொழி
பெயர்க்கும் உணர்ச்சி..


ஆச்சர்யம்:
கேள்வியின் பிறப்பிடம்..
புதுமையின் வெற்றி..
ஆர்வத்தின் தீ..
அதிர்ச்சியில் அசை போடப்படும் அரிசி..
கவிஞ்ர்களின் கற்பனை தூண்டுதல்..

Saturday, June 2, 2007

சின்னதாய் சில பொய்கள்..

1.
ஏய் காதலி!!!
நீ மட்டும் நிலவின் அருகே நிற்காதே..
உன்னால் நிலவின் அழகு குறைகிறது பார்..

2.
அந்தோ பரிதாபம்!!!
அந்த பூக்களைப் பார்..
உன் கூந்தல் அழகைக்கண்டு
வெட்கி தலை குனிந்து விட்டன..(வாடுதல்)

Friday, June 1, 2007

காதல் வலி - 2

என் பேனாவிலும் காதல் வலி
,மை கொடுக்க மறந்து
குருதி கொட்டியபோது..

கைகளிலும் காதல் வலி ,
உன்னைக் காணாத நாட்களை
நாட்காட்டியில் கிழிக்கும் போது..

இதழ்களிலும் காதல் வலி ,
உன்னை உள்ளே புதைத்து
வெளியே சிரிக்கும்பொழுது..

கண்களிலும் காதல் வலி ,
நம் காதல் பாதங்கள்
பதித்த இடங்களை காணும்போது..

இதயத்தில் காதல் வலி ,
நீ என்னை விட்டு அரை அடி நகரும் முன்
என் ஒரு துளி கண்ணீர் பூமீ சேர்ந்தபோது..

புத்தி காதலித்திருந்தால்
அறிவுரை சொல்லி திருத்தியிருப்பேன்..
மனம் காதலித்து விட்டது
அவஸ்த்தையை அனுபவித்தே மாயும் ..

விரல் தொடும் தூரத்தில் இருந்த போது விளங்கவில்லை ,
இந்த காதலின் வலிமை..
விழி தொடும் தூரத்திலேனும் தெரிவாயா ,
என ஏங்கும் போது தெரிந்தது காதலின் வலிமை..

உன்னோடு இருந்த வரையில்
எல்லமே ஓர் அழகு..
இன்று அழகென்ற சொல்லும்
அவஸ்தையாய் மாறியதேன்..?

இந்த உடலில் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது என்று தெரிந்தால் ,
எடுத்து களைந்து விடுவேன்..
உடலில் எல்லா பாகத்திலும் நம் காதல் தெரிகிறதே ,
என் உடலை எரித்து விடவா??

கடவுள் கண் முன்பு தோன்ற ,
வினா ஒன்று கேட்பென்
காதலை யார் கண்டுபிடித்தது? என்று..

மனம் இறந்த இவ்வுடலில்,
என் ரத்த நாளங்களும் ஊமை ஆகிப்போகும்
தருணத்தில் ,
உனக்காய் காத்திருப்பேன்
உன் மெளன மொழியேனும் கேட்க..
வருவாயா??

ரோஜா-பெண்கள்

ரோஜாவில் முள்..
அழகில் தான்
ஆபத்து உள்ளது எ
ன்பதை உணர்த்த..

எதிர் வீட்டுப்பெண்..

உன் வீட்டு கம்பியில்
காயும் துணி போல ,
நானும் மாலையில்
உனக்காய் காத்திருந்து காய்ந்து போவேன்
உன் முகம் காண..

மாலையில் நீ கோலம்
போட வருவாய்..
புள்ளிகளுக்கிடையே வளைந்து நீ போடும்
கோலம் போல ,
நட்புக்கூட்டம் இடையில் என் பார்வை வளைந்து
உன்னை கோலம் போடும்..

வாரம் ஒரு முறை கோவில் முகப்பில்
நீ ஏற்றும் தீபம் போல ,நானும் எரிவேன்
மீதம் உள்ள 6 நாட்களில் .

.மளிகை பொருட்கள் வாங்ககடை வீதி வருவாய்..
உனை அருகிருந்து ரசிக்க
நேற்றோடு நான் வெற்றாய் வாங்கியது 137ஆவது பேனா ..

நானும் சிறந்த நடிகன் ஆகி விடுவேன்,
உன்னிடம் என் காதலை எப்படி சொல்வது என
பல நூறு முறை ஒத்திகைப் பார்த்தே..

தோழிகளோடு நீ சிரித்து விட்டு போகையில்
ஒரு பார்வையை நான் உன் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் கவிப்பணிக்கு வேளை பளு அதிகம் ..
ஒரு பார்வையை நீ என் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் காதலுக்குபொங்கல்,தீபாவளி போனஸ்..

நம் விழிப்போரில்
தோற்பது யாராய் இருப்பினும் ,
வெல்லப்போவது நம் காதலாய் இருக்கக் கூடும்..

என் இதய கண்ணாடியை
ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போ..
நீயும் நானும் தெரிவோம்..
வெட்கத்தில் நீ சிரித்து விட்டு போகையில் ,
கண்கூசி கண் அடைக்கும் என் இதயம்..

நம் காதலை அரங்கேற்றும் வேலையில்
விடுமுறை தினமாய் அனுசரிக்கப்படும்
என் கனவுலோகத்திற்க்கு..

காதல் வலி..

உயிரைக் கொல்லும்
அம்பு அவள் கண்களில்
இருந்து வெளியேறியது என அன்று நான் கண்டிருக்கவில்லை..

காதல் வர்ணங்கள் பல
சேர்த்து பூசும்,
இறுதியில் நிலைப்பது
ஒரே வண்ணம்
நிழல் வண்ணமே !!

ஆசை வார்தைகளும் ,
ஜாடை பேச்சுக்களும்
காதலை சொல்ல எனை உந்த
"ச்சீ நீ இப்படிப்பட்டவனா? என்னும்
சொல்லின் முடிவில் என் மனம் நொந்தேன்..

காதல் நாடகத்தில் ஒப்பனை கலைத்துச் செல்வாள் அவள்..
அவள் போகையில்
என் ஒப்பனை மட்டும் அல்ல
என்னை நானே கரைத்து ,கலைத்து கொல்வேன்
என் கண்ணீரில்..

பார்க் பெஞ்சிலும் ,கடற்கரையிலும்
காதல் மமதையில் கழித்தபோது
காவலாளி சொல்வான்
"சீக்கிரம் வெளியேறு" என்று
அது காதல் வலியில் இருந்து தப்பிக்க
சொலப்பட்ட எச்சரிக்கை பலகை என அறிந்திருக்கவில்லை
இது என் திருமண பத்திரிக்கை என நீ கொடுக்கும் வரை..

உலகில் உள்ள ராமனை எல்லாம்
கண்ணனாய் மாற்றிக்கொண்டிருக்கும்
காலம் இது
காதல் இது..

ஆர்பாட்டமாகவும் ,
ஆராவாரத்துடனும் ,
தொடங்கிய என் காதல்
அமைதியாகவும்
அழகாகவும்
முடிந்தது
அவள் திருமணத்தில்..

காதல் வலையில்..

என் விழி பார்வை
உன்னை முத்தமிட்டதும்
காதல் கொண்டு அரைந்தாய்
அதன் காயங்கள் என் இதயத்தில்

ஆயிரம் சிரிப்பொலியின் மத்தியில்
உன் ஒரு மவுனம்
என்னை சாய்த்ததே ..

என் காம்பு மீசைக்கும்
உயிர் கொடுத்தவள் நீயே

தினமும் காலை
என் பார்வை உன்னை தொட கூடாதென
ஆலமரத்தில கட்டி வைத்தார் போல்
வருவேனே..
ஆனால் அவை வேரோடு பிய்த்து
கொண்டு வரும் உனை காணும்போது ..

உன் ஓர விழி பார்வையுடன்
போராடி
போராடி
இதயத்தில் குத்து பட்டு
வீர மரணம் அடைவேன் ..

உன்னிடம் எழுதுகோள்
பெறவே
என்னிடம் உள்ள பேனாக்களை
பல முறை கொல்வேன் ..

மாலையில் சூரியன்
சிவப்பதெல்லாம் ,
உன்னை பிரியும் தருணம்
வந்து விட்டது என்பதால்
வந்த கோபமோ?

நவீன யுக அலாவுதீனும் அற்புத விளக்கும்

நவீன யுக அலாவுதீனும் அற்புத விளக்கும்
(ஓர் கற்பனை)
தூசிக்கூட்டுக்குள் வீடு கட்டி கொண்டு வாழும் ,
தாடி வைத்த இளைஞ்சன் கையில்
ஓர் அற்புத விளக்கு கிடைக்க
பூதத்திடம் பலவற்றை கேட்டான்

தூசி அற்ற வீடு ,
தினம் ஒரு புத்தாடை ,
வெண் மேக மெத்தை ,
வீட்டிற்குள் வானம் ,
அதன் மத்தியில் ஓர் நிலவு என ..

எல்லாம் கிடைக்க உறக்கம் மட்டும் கடத்தி சென்று விட்டாளே ,
எப்படி உறங்குவது என புலம்ப..

யாரது குரு??
அவளைப் பற்றி சொல்லுங்கள் என பூதம் சொல்லியது

அவள் பெயர் அக்ஷயா
அள்ள அள்ள குறையாஅழகு
வெண் தாமரை உடல்
சூரியனும் தோற்றுப்போகும் சுட்டெரிக்கும் பார்வை
இரவிலும் கிடைக்காத குளிர்ந்த சிரிப்பு
பிரம்மன் அவளை வடித்து வடித்து கற்பனை தொலைத்த அழகு ..

ஆனால் ...

அதற்குள் ஆர்வம் தங்காமல் பூதம் செல்ல..
அவளை கண்டது..
சொன்ன அடையாளங்களுக்கு அவள் ஏற்றாவளா?
அல்ல அடையாளங்கள் கொண்டு செய்யப்படவளா??
என பிரிதது அறிய முடியா அழகு

காதல் வயப்பட்டு பூதம்
தன் காதலை சொல்ல ,
அவள் கட்டிவிட்டால் கையில் ராக்கி கயிறு
வருத்தத்துடன் ஒரே ஒரு கேள்வி கேட்டது

உன் அழகில் மயங்கியவர் லட்சம் பேர் இருப்பார்
உன் சிரிப்பில் மயங்கியவர் ஆயிரம் பேர் இருப்பார்
உன் பேச்சில் மயங்கியவர் நூறு பேர் இருப்பார்
ஆனால்
என் ஒருவனுக்கு மட்டும் ராக்கி கயிறா?

இல்லை அண்ணா நீங்கள் என் 76ஆவது அண்ணன்,
எனக்கு மணம் ஆகி விட்டது என முடிக்க
தாடி முளைத்து பூதம் ஜாடிக்குள் சிறைகொண்டது மீண்டும் ..

நாட்குறிப்பு..

நாட்குறிப்பு..

எதிர்காலமும்
கடந்தகாலமும்
அறிந்த ஜோசியன் அவன்..

சிலரது தினம்
உன்னிலே தொடக்கம்..
சிலரது தினம்
உன்னிலே முடியும்..

மகிழ்ச்சியில் அலங்கரிக்கப்படுவாய்..
துன்பங்களில் கரைக்கப்படுவாய்..

நீயும் ஒரு அரிய மலர் போலவே..
ஆண்டுக்கு ஒரு முறை புதிதாய் பூத்துக் கொண்டிருக்கிறாய்..

ரகசியம் சொல்..?
உனக்கு மட்டும் தான் வயது ஏற எற மீண்டும் பிறக்கும் வாய்ப்பு..

காதலர்களுக்கு ரகசிய வங்கி..
கவிஞர்களுக்கு கவிதை ஏடு..
வியாபாரிகளுக்கு கனக்குகளை சேகரிக்கும் கணினி..
மாணவர்களுக்கு அரசு விடுமுறை தாங்கும் குதூகலம்..

உனக்கும் எனக்கும் தாய் ,குழந்தை உறவே..
என்ன வித்தியாசம் என்றால்??
தினமும் நான் உன்னிடம் கதை சொல்லி
நானே உறங்குவேன்..

காதலியோடு கைகோர்த்து போகையில்:

காதல்..
அந்த மூன்றெளுத்து வார்த்தையில்
பல கோடி உயிர்களும்..
சில கோடி கவிஞர்களும்..
அதனுள்ளே சரண்..

நீ..
இந்த ஒரு எழுத்து வார்த்தையில்
என்
பல கோடி உயிர் அணுக்களும்..
சில கோடி ஆசைகளும்..
உன்னுள்ளே சரண்..

அட எங்கே நீ துவாரம்கண்டுபிடிக்கிறாய்??
எப்படியும்
இதயத்தில் நுழைந்து விடுகிறாயே..
உன் முதல் ஊடகம் கண்களா??

உனக்கு, அனுமதி இல்லை
பலகை எல்லாம் நிதர்சனம்
எப்படியும் நுழைந்து விட்டாய்..

நீ நுழைகையில்
உன் கனவு உலகத்தில் பறக்க
இறக்கைகளும் கொடுத்து விடுகிறாய் போலும்??

கண்களில் நுழைந்து
இதயத்தில் அமர்ந்து
ரத்த நாளங்களில் ஓடி
மூளையில் களித்து
உடலெங்கும் நீயே..
இப்போது என்னில் நீயா??
அல்ல உன்னில் நானா??

இப்பொதேல்லாம் நானும் அழகாய் தெரிகிறேன்..
உன் காதலோடு கண்ணாடி முன் நிற்பதால்..

விடை பெறும் தருணம்..
அந்த சுட்டு விரலில்
உயிர் இருப்பதை இன்று தான் கண்டேன்..
நீ அதை விடுத்து போகையில்..

2 மணி நேரம் உன்னிடம் பேசினேன்..
ஒன்றும் நினைவில்லை..
போகையில் பார்த்த அந்த பார்வை
பல நூறு வருடங்கள் நிலைக்கும்..

நீ அருகில்..
உடலெல்லாம் நெருப்பாய்..
நீ விலகினாய்..
உடலெல்லாம் குளிர்கிறது..
ஆம் உன்னைப் பிரிவதால் இதயம் கண்ணீர் வடிக்கிறது..

நீ விடை பெற்ற பின்
உன் பாதம் பட்ட
கடலில் குளித்தேன்..
புண்ணிய நதியில்
குளிப்பது நல்லதென
என் அம்மா சொல்லி இருக்கிறாள்..

மாற்றங்கள் வேண்டும்

மாற்றங்கள் வேண்டும்

அதே விடியல்
இன்று எப்படி இருக்கும்
என்னும் பயத்தோடு!!

அதே தேநீர்
சர்க்கரை குறைவாய் இருந்தாலும்
பருகும் சகிப்பு தன்மை!

அதே காலை மலர்!!
ஒரு கற்பழிப்பு
ஒரு கொலை
ஒரு கொள்ளை
செய்தி படிக்காவிட்டால்
அன்றைய தினம் முடம்..

அதே பேருந்து
பேருந்தில் மட்டுமே வீரம் காட்டும்
படிகட்டோர பயணம்!!

அதே முகங்கள்!!
போலி சிரிப்பு
பிழையான உறவுகள்
முக முடி போட்ட மனங்கள்

இரவில் ஒரு செய்தி
உறங்க மறுக்கும் மனத்திற்கு சில பாடல்கள்,
மாதம் ஒரு திரைப்படம்,
வாரம் ஒரு கோவில்,
பண்டிகை தினத்தில் தொலைக்காட்சி முன் மரணம்,
4 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் போல் சொந்த ஊருக்கு ஓர் பயணம்..

மாற்றம் வேண்டும்

பச்சை புல்வெளியில் படுக்கை ,
ஆடையற்ற நித்திரை ,
விழிக்கும் வரை உறக்கம் ..

மரமேறி தேநீர் பருக மரங்கள் ,
தேவதைகள் பரிமாறும் தேநீர்

சிரிக்க மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் செய்திகள் ,
குழந்தை முகம் அணிந்த மனிதர்கள்

சேற்றில் நடனம் , மழையில் களிப்பு
ஒற்றை அடி பாதையில் பயணத்தின் கவனம்

நிமிடம் ஒரு முறை புரட்டி போடப்படும் உலகம் ,
அடுத்த நொடியில் மறைந்து இருக்கும் மர்மம்..

இப்படி போக வேண்டும் உலகம்..
இது கனவு காணவே சமயம் ஒதுக்கும் உலகம்!!

அடடா இதோடு என் அவசர வாழ்வில்
கனவு காணும் சமயம் முடிந்து விட்டது
மீண்டும் நாளை என் கனவு உலகத்தில் சந்திக்கிறேன்..

கவிதை எழுதத் தான் ஆசை!!

கவிதை எழுதத் தான் ஆசை!!

கவிதை எழுதத் தான் ஆசை!!
அவளுக்காக கவிதை எழுதத் தான் ஆசை!!

முடிவெடுத்தேன்!!முனைந்தேன்!!

வெள்ளை காகிதங்கள் கண்ணாடி முன்பு!!
அருகில் சென்று விசாரித்ததில், அவளுக்கான கவிதையை விட
இவைகள் அழகாய் தெரிய வேண்டும்
என் அலங்காரமாம்!!

சற்று நகர்ந்தேன்!!
பேனாவின் ஒரு பகுதி சுவற்றில் முட்டி மோதி
தன்னை கூர்மை படுத்திக்கொண்டிருக்க!!
மற்றொறு பகுதிவானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தது,
வானத்தின் நீலம் கசிய,
அதை தன்னுள் நிரப்ப!!

ஒரு வழியாய்
சமாதானம் படுத்தி அமர்ந்தேன்,ஆயுதங்களோடு!!

உதட்டில் தமிழ் சொற்கள்
ஒன்றோடு ஒன்று
போர் தொடுக்க..
முதலில் வெளியேறி விட
வழக்காடிக் கொண்டிருந்தது!!

அவைகளுக்குள் சமரசம்
செய்து விட்டு

எழுதுகோலும்,
காகிதமும்
சங்கமித்து
கவிதை பிள்ளை பெற
முனையும் அந்த
ஆனந்த சங்கமத்தில்
என் கைகள்
என்ன எழுதவிருகின்றன
என எல்லாம் ஆவலோடு காத்திருக்க
எழுதி முடித்தேன்
என் கவிதையை

"தனுஜா" என்று
அவள் பெயரை!!