Saturday, May 26, 2007

கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

கண்மணி உனக்காய் ஓர் கவிதை..

என்ன செய்து பூலோகம் வந்தாய்?
அங்கே தாடி,மதுவுடன்
பிரம்மன் புலம்புகிறானமே??

அழகான புயல் நீ ,
என் கரை கடந்து விட்டாய்..
ஆனால் இன்னும்
நனைந்து கொண்டே இருக்கின்றேன்..

வாரிவாரி கொடுத்து
செல்வந்தன் ஆகும் இத்தொழிலில்
காதலைக் கொடுத்தே
உன்னைப் பெற்றேன்..

வரம் கொடு ,
பிரித்து தைத்த அந்த
இரண்டு கருப்பு வானவில்லில்
ஓர் புள்ளியாய்யாவது இருக்க ஓர் இடம்..
உன் நதியில் ஓர்
காய்ந்த சிறகாய்..
எப்போதும் உன்னை உரசி,உன்னுடன் பயணிக்க,,

அழகின் பிறப்பிடத்தில் நீ!!
அவஸ்தையின் இருப்பிடத்தில் நான்!!
காதலின் இறப்பிடத்திலும் நான் உன்னை காதலித்துக்கொண்டே தான் இருப்பேன்!!

மாதம் ஒருமுறை
நிலவிற்க்கு விடுப்பு கொடுப்பது ,
நீ பூமியில் உள்ளாய் என்னும் துணிவிலா?

சாய்ந்து பார்க்காதே..
பனைமரமெல்லாம் கொடை சாய்கிறது பார்
உன்னை ரசிக்க!!

அவள்: சீ பொய் சொல்லாதீர்கள்

அவன்: கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

எதிர் வீட்டுப்பெண்..

எதிர் வீட்டுப்பெண்..

உன் வீட்டு கம்பியில்
காயும் துணி போல ,
நானும் மாலையில்
உனக்காய் காத்திருந்து காய்ந்து போவேன்
உன் முகம் காண..

மாலையில் நீ கோலம்
போட வருவாய்..
புள்ளிகளுக்கிடையே வளைந்து நீ
போடும் கோலம் போல ,
நட்புக்கூட்டம் இடையில் என் பார்வை வளைந்து
உன்னை கோலம் போடும்..

வாரம் ஒரு முறை கோவில் முகப்பில்
நீ ஏற்றும் தீபம் போல ,
நானும் எரிவேன்
மீதம் உள்ள 6 நாட்களில் ..

மளிகை பொருட்கள் வாங்க
கடை வீதி வருவாய்..
உனை அருகிருந்து ரசிக்க
நேற்றோடு நான் வெற்றாய் வாங்கியது
137ஆவது பேனா ..

நானும் சிறந்த நடிகன் ஆகி விடுவேன்
,உன்னிடம் என் காதலை எப்படி சொல்வது
என பல நூறு முறை ஒத்திகைப் பார்த்தே..

தோழிகளோடு நீ சிரித்து விட்டு போகையில்
ஒரு பார்வையை நான் உன் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் கவிப்பணிக்கு
வேளை பளு அதிகம் ..
ஒரு பார்வையை நீ என் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் காதலுக்குபொங்கல்,தீபாவளி போனஸ்..

நம் விழிப்போரில்
தோற்பது யாராய் இருப்பினும் ,
வெல்லப்போவது நம் காதலாய் இருக்கக் கூடும்..

என் இதய கண்ணாடியை
ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போ..
நீயும் நானும் தெரிவோம்..
வெட்கத்தில் நீ சிரித்து விட்டு போகையில் ,
கண்கூசி கண் அடைக்கும் என் இதயம்..

நம் காதலை அரங்கேற்றும் வேலையில்
விடுமுறை தினமாய் அனுசரிக்கப்படும்
என் கனவுலோகத்திற்க்கு..