Thursday, March 8, 2007

சகோதரன் உறவு..

சகோதரன் உறவு..

உன்னிடம் ஒரு
சிறப்பு உள்ளது..
உன்னுடைய வன்முறையை
மட்டும் பல வருடங்களாய்
"மகிழ்ச்சியோடு" நினைவுகூறுகிறேன்..

நீ வானவில்லின் உதாரணம்..!
வானம் அழுது முடித்த பின்
நீ மட்டும் வண்ணமாய் ஒளிர்கிராய்..
வானமாய் நான்..
வானவில்லாய் நீ..
உன் பேச்சும்,நம்பிகையும் எனக்குள் வண்ணமாய்..

சேற்றில் புரண்டும்..
பேய் கதைகள் கேட்டும்..
குறும்புகள் செய்தும்..
ஒன்றாய் வளர்ந்தோம்..
ஆனால் நான் தாமதமாய் வந்து
பெற்றோரின் செல்லம் பெற்று விட்டேன் பார்த்தாயா??
இந்தப் பந்தயத்தில் தாமதமாய் வருபவருக்கே
அன்பு மிகுதி..

சகோதரன்..
அப்படி ஒரு உறவு நம்மிடம் இருந்திருந்தால்
என் பெற்றோறும் என்னிடம் கண்டிராத வலிகளை
உன்னிடம் கொடுத்திருக்க மாட்டேன்..
நீ சகோதர உறவோடு இலவச இணைப்பாய் கிடைத்த தோழன்..

உன்னுடன் இருக்கையில்
மகிழ்ச்சியும்,
ஆனந்தமும்,
கேலியும்,
குறும்பும்,
வாதமும்,
கோபமும்,
சோகமும்,
பரிமாற்றமும்
நம்மிடையே நேசம் என்னும் கயிற்றில்
ஊஞ்சல் கட்டிக் கொண்டு ஆடும்..

Saturday, March 3, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

21 ஆன்டுகளூக்கு முன்னால்..
இதே நாளில்
பிஞ்சுக் கதறலுடன் பிறந்தாய் நீ..
யவரையும் தெரியாது அப்போது உனக்கு..

இன்று அதே நாள்..
ஆம் இன்று உனக்குப் பிறந்தநாள்..

இன்றும் நீ ஒரு குழந்தையே..
ஆனால் இன்று நீ..
நிகழ்காலத்தின் மகிழ்ச்சியிலும்..
எதிர்கால்த்தின் ஆர்வத்திலும்..
உன்
தாயின் அரவணைப்பிலும்..த
ந்தையின் கண்டிப்பிலும்..
தம்பியின் சில்மிஷத்திலும்..
பூக்களோடு கடந்து கொண்டிருக்கிறாய் உன் பாதையை..

நானும் உன் பாதையில் ஒரு மைல்க்கல்லே
உன் பாதையில் பூக்கள் மட்டுமே இருக்க வாழ்துக்கிறேன்..
பாதையில் தெளிவு இல்லையென்றால் திரும்பி வராதே..கவலைக்கொள்ளாதே..
நான் மீண்டும் எழுவேன் ஒரு மைல்க் கல்லாக உனக்கு உதவ..

கடலைப் போல் மகிழ்சியும்..
வானம் போல் நிம்மதியும்..
உன் வாழ்வில் கிடைக்க வேண்டுகிறேன்..

கடலும்
காற்றும்
உள்ள வரை
நீ பிறந்த நாள் கொண்டாட வேண்டுமென விரும்புகிறேன்..

உனக்கு இன்று கிடைக்கும்
பூங்கொத்து வாழ்துக்களோடு
இவ்வொற்றை ரோஜா
வாழ்த்தையும் பெற்றுக்கொள்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இப்படிக்குபிரேம் குமார்..

எனக்கு கவிதை எழுதத் தெரியாது

எனக்கு கவிதை எழுதத் தெரியாது..
உலகில் உள்ள
கவிஞர்கள்,
புலவர்கள்
வர்ணிக்காத ஒன்றைப் பற்றி நான் வர்ணிக்கப்போவதில்லை
என் கவிதைக் கொண்டு..
ஆனால்

அவர்கள் வர்ணிக்க தொலைத்த வரிகளை
உன் இதழ்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த தாஜ்மகால் தூண்களை
உன் விரல்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த இரண்டு கருப்பு நிலாக்களை
உன் கண்களில் கண்டேன்..

கவலைப்படாதே கண்மனியே..
மறுபிறப்பு என இருந்தால்
மீண்டும் பிறப்பேன்..
உன்னைப்பற்றி வர்ணிக்க!!
உன்னைப்பற்றி மட்டும் வர்ணிக்க!!

பேருந்து தேவதை..

1.
நள்ளிரவு 12:00 மணி..!
மனைவியின் முதல் பிரசவ வேதனையை
காதில் கேட்டுக் கொண்டு நிற்க்கின்ற
கணவனைப் போல..

இந்த வருடமேனும் வான்மழை
பூமிப்பந்தை முத்தமிடாதா?
என ஏங்கும்விவசாயி போல..

இதழ்களுக்கும் சுவாசக் குழலுக்கும் உள்ள இடைவெளியில்
காம்பு முடி முளைக்காதா?எனக் காத்திருக்கும்
பாலகனைப் போல..

தாயின் நிழல் கருவிழிகளுக்கு எட்டாதா?
எனபசியில் இருக்கும் குழந்தைஅழுவது போல..

கிடந்தேன்..!கிடந்தேன்..!

உடலை பூமியிலும்உள்ளத்தை நிலவிலும்
தடம் பதித்து கிடந்தேன்..!
ஆம் நாளை காலை என்னவள்
பதில் கூறப் போகிறாள்..
நான் காகிதத்தில் கொடுத்த என்
இதயத்திற்கு..

மறுநாள்:
விடிந்தது..!
ஏனோ காக்காய்,குருவிகளுக்கும்
என்னவளின் முடிவு கேட்கும் ஆர்வத்தில்
வேகமாய் துயில் எழுந்ததாய் தோன்றியது..

முக்கால் சொம்பு தண்ணீரில்
நனைந்தும் நனையாமலும்
குளித்து முடித்தேன்..

தாயின் அரை கோப்பைத் தேனீரின்
அன்பையும் உதாசினப்படுத்தி
வீதியை நோக்கி 100 மைல்
வேகத்தில் செல்ல முனைந்தேன்..!

வீதியில்..!!
அழையா விருந்தாளி போல்
நண்பன்..
சில்லென்று சிதறியது
என் பாதங்கள் வேறு பாதை நோக்கி..

ஒரு வழியாக பூலோகச் சொர்கத்தை அடைந்தேன்..
ஆம்..அது தான் நான் அவளை தினமும்
சந்திக்கும் பேருந்து நிலையம்..!

என் கடிகாரம் அன்ன நடை இடுவதை
வருத்ததோடு நோக்கிக் கொண்டு இருந்தேன்..

இதோ காலைப் பொழுதில் மொட்டு
விரிவதைப் போல் என் சிற்பம் மெல்ல
மெல்ல நடந்து வந்துகொண்டிருக்கிறது..

2.
முதல் நாள்..

நேரமாகியும் வராத
பேருந்தை திட்டியபடி
திரும்பியது என் பார்வை எதிர் திசை நோக்கி..!

இன்று பகலில் பவுர்னமி போலும்..
பிரகாசமாய் இருந்தது அவள் வரும் திசை..

இதயம் பதை பதைத்தது..
அவள் நான் நிற்கும் பேருந்து நிலையம்
நோக்கி மிதந்து வருகிறாள்..

இதயம் அவள் நடை அசைவிற்க்கு
எற்றாற் போல் தபேலா வாசித்தது..

திட்டிய என் இதழ்கள் வேண்டியது..
ஓடுனர் கடவுளாக..!நான் பக்தனாக..!
இன்று முதல் இப்பேருந்துதாமதமாகவே வர வேண்டும் என்பது என் வேண்டுதலாக..!

யார் இவள்??
விண்ணிலிருந்து விழுந்த நட்ச்சத்திரமோ??
அல்ல நிலவின் ஒரு துண்டோ??
தெரியவில்லை..
ஒன்று மட்டும் விளங்கியது..
இவள் பிரம்மனை ஏழையாக்கி பிறந்திருக்கிறாள்..

அவளென்னும் நிலவில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்..
அவள் சிரித்தாள்..
என் இதயம் சிதறியது..
சிதறிய துண்டுகளை சேகரிப்பதற்க்குள்என் உயிரைப் பிரியும் தருணம் வந்து விட்டது..
ஆம்..
நான் ஏற வேண்டிய பேருந்து கண்ணில் பட்டது..

[தொடரும்..]

3.
கணப் பொழுதில் என் காதலை
என் இதயத்திலிருந்து வேரோடு
பிடுங்கி விட்டதாய் ஒரு எண்ணம்..!!
அட!! எப்போது என் இதயத்தில்
"காதல்" என்னும் வார்த்தை வேரிட்டது??
ஓ..!!இது தான் கண்டதும் காதலோ?

பண்டமாற்று முறை நடந்து
கொண்டிருக்கையில் இடையூரு செய்தான் கண்டக்டர்
"வேகமாய் இறங்குங்கள்" என குரல் எழுப்பி..
ஆம்..பண்டமாற்று முறையே!!
என் இதயத்தை கொடுத்து விட்டேன்..
அவள் காதலை மாற்றாய் பெற காத்திருகின்றேன்..

சற்றும் சலனமில்லாமல்
என்னைக் கடந்து சென்றாள்..!
நீ கடக்கையில் உன் அழகு
என்னை வீழ்த்திவிட்டதாய்
கேலி செய்வதைப் போல் தோன்றியது..!

பூக்கள் மொத்தமும்
ஊர்வலம் போவதை இன்று தான் கண்டேன்..


நான் மீண்டும் மீண்டும் வீழ்வதில்
ஆண்டவனுக்கும் விருப்பம் போலும்..!
ஆம் அவளும் என் பேருந்து ஏறினாள்..


4.

வீழ்வதிலும் இன்பம் தான்..!
வீழ்வது உன் அழகில் தானே..
என்ன காயங்கள் மட்டும் என் இதய்த்திற்க்கு..

அவள் இசைத்த முதல் இசை
"இந்த பஸ் பீச் ரோடு போகுமா?"
அது தான் என் காதில் அன்று ஒலித்த கடைசி ஒலி!!


வேடந்தாங்கல் விருந்தாளி, ஊர்
செல்வதைப் போல் இறங்கிச்
சென்றது என் பறவை
அவள் நிறுத்தம் வந்ததும்..!!

அன்று என் பணிமுடித்து
திரும்புகையில் ரசித்தேன்..
தேன் உறிஞ்சும் பூக்களை!!
மழலையின் சிரிப்பை!!
தென்றலை!!
இசையை!!
குழாய் அடி சண்டையும்
குழல் ஊதுவதாய் ஒலித்தது என் காதில்!!

இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்??
கேட்டது மனம்..!!
இவைகள் காதலியோடு வந்த
இலவச இணைப்பா??
அவைகள் சொன்னது
"வாழ்வை ரசிக்க தெரிந்தவனுக்கு
கயிற்றுக் கட்டிலும் பஞ்சு மெத்தையே..
ஒரு செம்பு கூழும் கோழி குழம்பே..
இன்று தான் நீ ரசிக்க தொடங்கியிருக்கிறாய்.."
ஆக என்னை ரசிக்க வைத்தவளும் அவள் தானோ??

இது காதலா??இல்லை காமமா??
காமம் என்றால் என் கண்கள் அவளை கற்பப்ழிப்பு தானே செய்திருக்கும்??
ஆனால் இல்லையேநான் அவளை தரிசிக்கத் தானே செய்தேன்??
[தொடரும்]

5.

இரவில்..
இரயில் பயணத்தில் பின்னோக்கி
செல்லும் மரங்களைப் போல
பின்னோக்கி பயணம் செய்து
கொண்டிருந்தேன் காலப் பயணத்தில்
அவள் கண்களை மீண்டும் காண..

உன்னிடம் கேட்கவில்லை
நீ என்னிடம் களவாண்ட
நிமிடங்களை திருப்பி தா??என
மீண்டும் எப்போது களவாடுவாய்?? எனவே கேட்கின்றேன்..

மறுநாள்..
காதல் தேவன் உரசிச்
சென்றதில் கவிதையும் பிறந்தது..
"வலப் புள்ளி நான்..
இடப் புள்ளி நீ..
காதல் என்னும் மூன்றாம் புள்ளியில்
முழுமையடைந்தது நம் எழுத்து..
இது ஆய்த எழுத்து அல்ல..
நம் உயிர் எழுதிய உயிர் எழுத்து..

"தேவதை ரதத்தில்
ஊர்வலம் செய்வதை
காணக் காத்திருக்கும் பக்தனை போலவே
தினமும் நம் பூலோக சொர்கத்தை வந்தடைகிறேன் வேகமாய்..

இப்படியே தினமும் பூக்கின்றேன்..
என்றோ ஒரு நாள்
நீ தேன் உறிஞ்ச வருவாய் என..
கொடுத்து வாழ்வதில் இன்பம் தான்
என்னும் தத்துவத்தில் சங்கமிக்க..

இதயத்தின் கனம்கூடி விட்டது..
உன்னுடய காதலையும்
சேர்த்து சுமக்கிறேன் அல்லவா??

6.

என் நாட்காட்டியில் மொத்தம்
261 நாட்காளே..
சனியும்,ஞாயிறும் நாடு கடத்தப்பட்டனர்
என் நாட்காட்டியில்..

என்னுடன் வா..
இருவரும் சேர்ந்து ஒரு ஆயுளை பகிர்வோம்..

சூரியன்க்கும்,சந்திரனுக்கும் இடையில்
ஊஞ்சல் கட்டி
உல்லசமாய் கழிப்போம் நம் பொழுதை..

ஒரே கோப்பையில்
தேனீர் அருந்துவோம்..
ஒரு வாய் நீ..
ஒரு வாய் நான்..
இருவரது எச்சிலும் கலக்கட்டும்..
அளவுக்கு மிஞ்சி அமிர்தம் உண்டு
காதல் கடலில் மூழ்கி இறப்போம்..

அடை காப்பேன் உன்னை..
நிலாச் சோறு ஊட்டுவேன்..
நீ சினுங்குகையில் முத்தங்கள் கொடுப்பேன் லஞ்சமாய்..
உன் தாயிர்க்குப் பிறகு
மீண்டும் உன்னை சுமக்க விரும்புகிறேன் ஒரு தாயாக..

என் பாதையில்
மைல் கல் அல்ல நீ..
நான் செல்லும் பாதை நீ..

அனைத்தையும் சொல்ல நினைக்கிறது மனம்..
ஆனால் உன்னைக் காண்கையில்
சொற்கள் அனைத்தும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஒளிந்து கொள்கிறது..
என்னையும் கொல்கிறது..

இப்போதைக்கு என் கண்கள் மட்டுமே என் மொழியாய்..
நாளை கண்டிப்பாய் உன்னிடம் பேசி விடுவேன் என்பது என் நம்பிக்கையாய்..

கனவு

கனவு::::

நிழல்களை
நிஜமாய் காண
நிஜத்தில்
தோன்றும்
நிழல்..

அவளின் அழகு

பிரம்மனை கடனாளி ஆகி விட்டாயமே?உண்மையா?

நிலவின் வெண்மை கொண்டு உனக்கு வண்ணம் பூசினாயமே??
அட அது தான் நிலவின் ஒரு பகுதி வெண்மை குறைந்து உள்ளதோ?

பஞ்சு மெத்தை மேகம் கொண்டு உந்தன் தேகம் செய்தானாமே??
அட அது தான் வானத்தில் மேகத்தின் பற்றாகுறையோ??

இரவு நேரத்தின் வானத்தை இரு உருலை ஆக்கி உந்தன் கண்களில் வைத்தானமே??
அட அதனால் தான் இப்பொழுதெல்லாம் அந்தி சாய்வதில்லையோ??

அந்த நட்சத்திரம் பறித்து உந்தன் கண்ணங்களில் பருக்கள் செய்தானாமே??
அட அதனால் தான் எவற்றையும் இப்போது வானத்தில் காண முடிவது இல்லையோ??

அமிர்தம் கொண்டு உந்தன் இதழ்களை செய்தானமே??
அட அதனால் தான் தேவலோகத்தில் தேவர்களுக்கு உணவு பற்றாகுறையோ??

இவர்க்ளுக்கெல்லாம் கடனை எப்படி தீர்க்க போகின்றேன் என்று
பிரம்மன் என்னிடம் தினமும் புலம்புகிறான்..

எல்லோரும் காதலியுங்கள்....

எல்லோரும் காதலியுங்கள்....

அவன் வீட்டுக் குழாயில் ஏற்ப்பட்ட விரிசலில் வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

அவன் பல் துலக்கும் போது வழிந்தோடி வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...அ

வன் முக சவரம் செய்யும் போது கசிந்தோடும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

பாதி குடித்த தண்ணீர் பாக்கெட்டை விசி எறிவதில் வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

அவன் வீட்டுப் பக்கத்தில் கழிவு நீர் குடி நீரில் கலந்து வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

ஆனால் அவன் காதலியின் ஒரு துளி வியர்வை பூமியில் விழுந்தது
என
கண்ணீர் வடிக்கின்றான்...

எல்லோரும் காதலியுங்கள்....
காதலியின் வியர்வைத் துளிகளை சேமித்தாவது
தமிழ்நாட்டின் தண்ணிர் பஞ்சத்தை தீர்ப்போம்..

என்னவள்

காற்று அடித்ததால் கொடி அசைந்த்தா
அல்ல கொடி அசைந்த்தால் காற்று அடித்ததா??

இவை பழையவை..
இதோ சொல்கிறேன் என் புதியவைகளை..

உன்னைப் பற்றி எழுதியதால் கவிதை அழகானதா
அல்ல உன் ஆழகை பற்றி எழுதியதால் அவை கவிதை ஆனதா?

அழகென்றால் உந்தன் பெண்மையா
அல்ல பெண்மையில் பிறந்த அழகா நீ??

நிலவில் இருந்து உனக்கு வண்ணம் பூசினரா
அல்ல உன்னில் இருந்து நிலவிற்க்கு வண்ணம் பூசினரா??

உன்னை கண்டதால் சூரியன் உதிக்கிறதா
அல்ல சூரியன் உதிப்பது உன்னைக் காணவா??

நீ உன் தாயின் முழூ உருவமா
அல்ல உன் மகளின் மாதிரி உருவமா??

உன்னை கண்டதும் காதல் பிறந்ததா
அல்ல உன்னை காதலிக்க கண்டதும் மீண்டும் பிறந்தேனா??

கவிதையைப் பற்றி கவிதை

கவிதை என்பது

என்
கண்ணீர்,கவலை
மகிழ்ச்சி,பாசம்,
நேசம்,பரிவு,
பிரிவு,நட்பு,
காதல்,ரசனை,
கற்பனை,வேதனை,
துன்பம்,இன்பம்..

என எல்லாவற்றையும்
என் தனிமையில்
புதைக்க
அரிதாரம் பூசிகொண்ட
சவப்பெட்டி..

காதல் கவிதை

தேவலோகத்தில்
ஒரே சலசலப்பாம்..

கம்பனும்
பாரதியும்
பாரதிதாசனும்வ
ள்ளுவனும்

மீண்டும் பிறக்க வேண்டுமாம்
உன்னைப் பற்றி கவி எழுத..

ஜாதி

மனிதனின் பரிணாம வளர்ச்சியின்
முதல் பரிணாம வீழ்ச்சி ஜாதி..

தேன் குடிக்கும் தேனீக்கள் பார்ப்பதில்லை
பூக்கள் என்ன ஜாதி என்று..

ஒளி கொடுக்கும் சூரியன் பார்ப்பதில்லை
ஜீவராசிகள் என்ன ஜாதி என்று..

பால் வண்ண ஒளிவீசும் சந்திரன் பார்ப்பதில்லை
உயிர்கள் என்ன ஜாதி என்று..

எங்கேயும் கேட்டதுண்டா
முதலியார்களுக்கு ஒரு கை ஒரு கால்
மட்டுமே படைக்கப்படுமென??
மனிதனைப் படைக்கும் இறைவனே பார்ப்பதில்லை
மனிதன் என்ன ஜாதி என்று..

இவை மனிதனுக்கு மனிதனே இட்டக் கோடுகள்..
இக்கோடுகள் உள்ள வரை ஜாதிகள் இருக்கும்..
ஜாதிகள் இருக்கும் வரை வன்முறை நிலைக்கும்..
வன்முறை நிலைக்கும் வரை மனிதம் பிறக்காது..
மனிதம் பிறக்கும் போது மனிதன் இருக்க மாட்டான்..

அப்போது உறக்கச் சொல்லுங்கள் நீங்கள் எந்த ஜாதி என்று..
கேட்க வெறும் வெற்று பூமி மட்டுமே இருக்கும்..

முடிவு தெரிய வேண்டும்

முடிவு தெரிய வேண்டும்..

வருடம் ஆறு..!
இன்னும் உன் நிழலை பின் தொடர்கிறதுஎன் கால்கள்..!
என்ன??
இன்னும் எனக்குமதிபெண் இடுகிறயா??
வேகமடி பெண்ணே..!
முடிவு தெரியும் முன் இந்தவிடைத் தாள் எரிந்து விட போகிறது..!
இறந்த பின் தான் நரகம் என எவன் சொன்னது?
முட்டாள் அவன் காதலிதிருக்க மாட்டான்..
எனக்குள் ஏனோ பயம்..!
எங்கே உன் நிழலை தேடி
என் நிஜத்தை இழந்கு விடுவேனோ என்று!!

ஒரு பெண்ணின் காதல் தோல்வி

காதலி..
ஒவ்வொரு ஆணின் இரன்டாம் தாய்..
இது ஷேக்ஸ்பியர் கூற்று..
ஆம் நீ உன் இரண்டாம் தாயை இழந்து விட்டாய்..

நீ கொடுத்த முத்தங்கள் மட்டும்
என் இதயத்தில் வடுக்களாய் மாறி நிற்க்கின்றது..

கேட்கும்போதெல்லாம் முட்கள் இல்லா
ரோஜா தந்தாய்..
இன்று என் கையில் உன் மணப்பத்திரிக்கை..எ
ன் கண்களில் கண்ணீர்..
என்ன??
கொடுக்க மறந்த முட்களைக்கொண்டு
இந்த மணப்பத்திரிக்கை செய்தாயா??
ரணமாய்க் கொல்கிறதே??

நேற்று
என்னைநிலா என்றாய்..
நட்சத்திரம் என்றாய்..
மேகம் என்றாய்..
என்ன??
உணர்ச்சி அற்ற பொருட்கள் உன்னிடம் வழக்கிட
வராது எனும் நம்பிக்கையில் கூறினாயா??
இன்று என்னை
உன் பழைய காதலி என்றாய்..
நானும் உணர்ச்சி அற்ற பொருளாகவே நிற்க்கின்றேன்..

நான் கல்லறை கட்டப் போவதில்லை என் காதலுக்கு..
கோவில் எழுப்புகிறேன்..
முடிந்தால் வழிபட்டு செல்..
என்னை அல்ல என் உண்மைக் காதலை..

சிசுக் கொலை

சிசுக் கொலை..
நான் என்ன தவறு செய்தேன்??

லஞ்சத்தில் கொழுத்த புழுக்களும்
வஞ்சகத்தில் வாழும் வண்டுகளும்
வாழும் இவ்வுலகில்
இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??

நான் என்ன தவறு செய்தேன்??
கல்வியை விற்க்கும் மூடர்களும்
கலாச்சாரத்தை தொலைக்கும் பொறுப்பற்றோறும்
வாழும் இவ்வுலகில் இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??

நான் என்ன தவறு செய்தேன்??

உடலை விற்க்கும் விலை மாதர்களும்
பணத்திற்க்காக மனசாட்சியை தொலைக்கும் மனிதர்களும்
வாழும் இவ்வுலகில் இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??

விடை கிடைக்கவில்லை இவைகளுக்கு...
ஒன்று மட்டும் விளங்கிவிட்டது..
இவர்களுடைய பாதங்களுடன் என் பாதங்களும்
நடை போட வேண்டுமா??
வேண்டாம்..
நான் தவறு செய்தவனாகவே இருந்து விடுகிறேன் தாயே..
நான் தவறு செய்தவனாகவே இருந்து விடுகிறேன் ..

அனாதை

என் தாயின்
பத்து மாத துயரத்தையும்..
பிரசவ வேதனையையும்..
என் அழுகையால் கரைத்தவன் நான்..
நான் எழுப்பிய முதல் ஒலியில்
என்னைப் பெற்ற பெண்ணை
முழுமையடைய செய்தவன் நான்..
பெண்ணென்று பிறந்தவளை
தாய் என பெயரிட்டேன்என் பிறப்பால்..
ஆனால் அவளால் எனக்கு கிடைத்த பெயர் அனாதை..

கண்கள்

கண்கள்:

நீ
வெள்ளை வான் வெளியில்
ஒரு கருப்பு நிலா..

நீ மோசமானவன்..
நீ செய்யும் சித்து விளையாடிற்க்கு,
தண்டனை அனுபவிப்பது இதயம்...

நீ மட்டும் இல்லையென்றால்
காதலுக்கும்,காதலர்களுக்கும்
"இடம் காலி இல்லை" என முடக்கி விடப்பட்டிருப்பார்கள்..

நீ வேகமாக பயிலும் மாணவன்..
காதலர்களிடம் இருக்கும்போது மட்டும்
எப்படி குறுகிய காலத்தில் நடனம் கற்றுக்கொள்கிறாய்??
ஓரக் கண்களால் பார்ப்பதும்.
.கண்களில் ஜாடை சொல்வதும்..
உதடுகள் பேச மறுக்கும் போது நீ பேசும் பாஷையும்..
அப்பப்பா..
காதல் என்னும் ஆட்சியில்
நீ தான் ஆட்சி மொழி என
அறிவிக்கப் படாதது மட்டுமே குறை..

நீயும்,வானமும் ஒன்று தான்..
கருமேகங்கள் ஒன்று சூழ மழை..
இதயத்தின் ரணங்கள் ஒன்று சூழ கண்ணீர்..

உன்னிடம் சில கேள்விகள்..??

கேள்வி:
ஒரு துளி கண்ணீரில் எத்தனை அளவு சோகத்தை வெளியேற்றுகிறாய்??

பதில்:
ஒரு பிடி சர்க்கரையில் எத்தனை இனிமை உள்ளது என அளவிட முடியுமா உன்னால்??உணரத் தானே முடியும்??அது போலவே கண்ணீரும்..
வெளியேறும் காயத்தின் அளவை உணரத்தான் முடியும்..

கேள்வி:
உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் உன்னால் கண்ணீரில் வெளியேற்றி விட முடியுமா??

பதில்:
உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம்கண்ணீரில் வெளியேற்றியிருந்தால் என்றோ உலகம் கண்ணீரில் கரைந்து அழிந்திருக்கும்..

மலடியின் குழந்தை

மலடியின் குழந்தை:

என் அன்பு மகனுக்கு..

நித்தம் நித்தம்
நித்திரை தொலைத்து
நித்தமும் உனை நினைத்திருக்கும்
நிம்மதி அற்ற தாய் எழுதுவது..

எப்போது வருவாய் நீ??

உன்னை "சுமக்க" வேண்டும் என வர மறுக்கிறாயா??
நான் உன் "சுமை" தாங்கி அல்லடா
நான் உன் "சுகம்" தாங்கி..

தட்டச்சிலும்,கரண்டியிலும் தேய்ந்த
இவ்ரேகைகள்
உந்தன் பஞ்சனை தேகத்திலும்
கொஞ்சம் தேயட்டுமே..

இந்த பூமியில்(கருவறை) பிறக்க
உனக்கு வளம் போதவில்லையா??
காய்ந்த நிலத்திலும்
கள்ளிச்செடி வளர்கிறதே??

நீ வரும் வரை
என் கருவறையும் என்க்கு கல்லறையே..
வருகை தா..
என் கருவறைக்கு ஒரு முகவரி தா..
பால் பொங்க(வாந்தி)வரவேற்கிறேன் உன் புது அறைக்கு..

நீ என் கண்ணில் உள்ள கருவிழி..
நீ இல்லாமல் என் கண்களுக்கு அழகேது??
என் கருவறையும் இப்போது அப்படியே??

உன் பிஞ்சு சினுங்கல் வேண்டும்..
நீ முட்டி மோதி பால் உண்ணும் சுகம் வேண்டும்.
.இரவெல்லாம் விழித்து காக்கும் அந்த சுகதுன்பம் வேண்டும்..
உந்தன் மழலைக் கதறல் வேண்டும்..

அடுத்த கடிதம் உன் புது அறையில் வந்து பெற்றுக்கொள்..

இப்படிக்கு..
உன் வருகைக்கு காத்திருக்கும்..
மலடித்தாய்..