Sunday, June 6, 2010

கரையோரம் ஒதுங்கிய கவிதைகள்..

உன் ஓர விழி பார்வையில்
வழிந்தோடும் காதலை,
ஒரு போதும் நான் தவறவிட்டதில்லை..

நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் நம் கண்கள்..
அப்போது வெளியேறும் கண்ணீர்
பூமியில் தடம் பதிக்கும் முன்
என் இதழ்கள் அதனை இடம்பெயர்க்கும்..

அப்படி முறைத்து பார்க்காதே..
என்னால் இன்றும் தமிழோடு மல்லுக்கட்ட முடியாது,
உன்னை பற்றி கவிதை எழுதுவதற்க்கு..

ஒரு நாள் உனை வழி
மறித்து முத்தம் ஒன்றை பெற்றுக்கொண்டேன்..
உன்னை வழிமறிக்க வேண்டுமென்றே இப்போதெல்லாம் தனியாய் வருகிறாயோ??

தனிமைக்காய் உறவுகளை விரட்டியடித்து,
நம் இடைவெளி குறைக்கையில்,
உறங்கிய கவிஞன் விழித்துகொள்கிறான்..
இவனை எப்படி விரட்டி அடிப்பது..??

அலை அலையாய் தமிழ் சொற்க்கள்
அங்கும் இங்கும் அலைந்தோட,
கவிதையாய் மாறி கரை ஒதுங்கியது
உன் பாதம் கண்டவுடன்..

உறவுகளுக்கு இடையில் வளைந்தோடி,
தேடி அலைந்து தம்மைதம் இணைத்துகொண்டது நம் கண்கள்,
அழகாய் தெரிந்தது நம் காதல் கோலம்..

உன்னைப் பற்றி எனக்கு முன்
ஒருவன் கவி எழுதி வைத்துள்ளான்..
உன் உதட்டு வரிகளைத்தான் சொல்கிறேன்..

நான் படித்த சிறந்த சில வரிகளில்
உன் உதட்டு வரிகளும் அடங்கும்..

புத்த்கம் படிப்பதை நிறுத்திவிட்டேன்,
உன்னைப் படிக்க தொடங்கிய நாளிலிருந்து..

நீ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய்..
புத்தகம் உன்னை படித்துக் கொண்டிருந்த்து..
நீ பக்கங்களை திருப்புகையில்,
அதன் அழுகுரல் என் காதுகளில்..