மாற்றங்கள் வேண்டும்
அதே விடியல்
இன்று எப்படி இருக்கும்
என்னும் பயத்தோடு!!
அதே தேநீர்
சர்க்கரை குறைவாய் இருந்தாலும்
பருகும் சகிப்பு தன்மை!
அதே காலை மலர்!!
ஒரு கற்பழிப்பு
ஒரு கொலை
ஒரு கொள்ளை
செய்தி படிக்காவிட்டால்
அன்றைய தினம் முடம்..
அதே பேருந்து
பேருந்தில் மட்டுமே வீரம் காட்டும்
படிகட்டோர பயணம்!!
அதே முகங்கள்!!
போலி சிரிப்பு
பிழையான உறவுகள்
முக முடி போட்ட மனங்கள்
இரவில் ஒரு செய்தி
உறங்க மறுக்கும் மனத்திற்கு சில பாடல்கள்,
மாதம் ஒரு திரைப்படம்,
வாரம் ஒரு கோவில்,
பண்டிகை தினத்தில் தொலைக்காட்சி முன் மரணம்,
4 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் போல் சொந்த ஊருக்கு ஓர் பயணம்..
மாற்றம் வேண்டும்
பச்சை புல்வெளியில் படுக்கை ,
ஆடையற்ற நித்திரை ,
விழிக்கும் வரை உறக்கம் ..
மரமேறி தேநீர் பருக மரங்கள் ,
தேவதைகள் பரிமாறும் தேநீர்
சிரிக்க மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் செய்திகள் ,
குழந்தை முகம் அணிந்த மனிதர்கள்
சேற்றில் நடனம் , மழையில் களிப்பு
ஒற்றை அடி பாதையில் பயணத்தின் கவனம்
நிமிடம் ஒரு முறை புரட்டி போடப்படும் உலகம் ,
அடுத்த நொடியில் மறைந்து இருக்கும் மர்மம்..
இப்படி போக வேண்டும் உலகம்..
இது கனவு காணவே சமயம் ஒதுக்கும் உலகம்!!
அடடா இதோடு என் அவசர வாழ்வில்
கனவு காணும் சமயம் முடிந்து விட்டது
மீண்டும் நாளை என் கனவு உலகத்தில் சந்திக்கிறேன்..
No comments:
Post a Comment