Friday, June 1, 2007

காதலியோடு கைகோர்த்து போகையில்:

காதல்..
அந்த மூன்றெளுத்து வார்த்தையில்
பல கோடி உயிர்களும்..
சில கோடி கவிஞர்களும்..
அதனுள்ளே சரண்..

நீ..
இந்த ஒரு எழுத்து வார்த்தையில்
என்
பல கோடி உயிர் அணுக்களும்..
சில கோடி ஆசைகளும்..
உன்னுள்ளே சரண்..

அட எங்கே நீ துவாரம்கண்டுபிடிக்கிறாய்??
எப்படியும்
இதயத்தில் நுழைந்து விடுகிறாயே..
உன் முதல் ஊடகம் கண்களா??

உனக்கு, அனுமதி இல்லை
பலகை எல்லாம் நிதர்சனம்
எப்படியும் நுழைந்து விட்டாய்..

நீ நுழைகையில்
உன் கனவு உலகத்தில் பறக்க
இறக்கைகளும் கொடுத்து விடுகிறாய் போலும்??

கண்களில் நுழைந்து
இதயத்தில் அமர்ந்து
ரத்த நாளங்களில் ஓடி
மூளையில் களித்து
உடலெங்கும் நீயே..
இப்போது என்னில் நீயா??
அல்ல உன்னில் நானா??

இப்பொதேல்லாம் நானும் அழகாய் தெரிகிறேன்..
உன் காதலோடு கண்ணாடி முன் நிற்பதால்..

விடை பெறும் தருணம்..
அந்த சுட்டு விரலில்
உயிர் இருப்பதை இன்று தான் கண்டேன்..
நீ அதை விடுத்து போகையில்..

2 மணி நேரம் உன்னிடம் பேசினேன்..
ஒன்றும் நினைவில்லை..
போகையில் பார்த்த அந்த பார்வை
பல நூறு வருடங்கள் நிலைக்கும்..

நீ அருகில்..
உடலெல்லாம் நெருப்பாய்..
நீ விலகினாய்..
உடலெல்லாம் குளிர்கிறது..
ஆம் உன்னைப் பிரிவதால் இதயம் கண்ணீர் வடிக்கிறது..

நீ விடை பெற்ற பின்
உன் பாதம் பட்ட
கடலில் குளித்தேன்..
புண்ணிய நதியில்
குளிப்பது நல்லதென
என் அம்மா சொல்லி இருக்கிறாள்..

No comments: