Thursday, August 19, 2010

கிட்டுவாகிய நான்...

என்னை நினைவிருக்கிறதா?
மறந்திருப்பாய்..
புதிய நட்பும்,
புதிய உறவுகளும்
உன் கண்னை மறைத்திருக்கும்..
நிறம் மாறும் மனிதர்களில்
நீ மட்டும் என்ன விதிவிலக்கா?

உன்னை அரை நிர்வாண கோலத்தில் பார்த்த
ஒரு சில உயிர்களில் நானும் ஒருவன்..

உன் இதழ் வருடிய காயங்கள் மாறா
இதயம் கொண்டவன்..

அப்போதெல்லாம் இடி மின்னலெனில் உனக்கு பயம்,
அத்தருணத்தில், என்னை இறுக்கி கட்டிக் கொண்டு உறங்கி இருக்கிறாய்..

சில நேரங்களில் உன்னை அழவைத்துப் பார்பதில் ஒர் இன்பம் எனக்கு,
என்னை காணாமல் தேடி அலையும் உன் கால்களை முத்தமிட தோன்றுமடி எனக்கு..

என்னோடு சேர்ந்து சிரித்தாய்..
என்னோடு சேர்ந்து அழுதாய்..
என்னுடய நேரம் எல்லாம் உன் மடி மீது உறங்கியது..
உன்னுடய நேரம் எல்லாம் என்னை அனைப்பதில் நனைந்தது..

காலம் கரைபுரண்டோடியது..
விதி எழுதிய தீர்ப்பில் நான் அகப்பட்டேன்..
உன் விரல் பிடித்த கைகள் இன்று,
தெரு நாய்களின் விளையாட்டுப் பொம்மையாய்..
ஊனத்திற்க்கு உலகம் தந்த பரிசாய்
நானும்,என் எதிர்க்காலமும் ஒர் மூலையில் ஒதுக்கப்பட்டோம்..

அன்று ஒரு நாள் உன்னை எதேச்சையாக
சந்திக்க நேர்ந்தேன்...
பிரிவின் மிகுதியில்,
காதலின் வலியில்
எனை வாரி அனைத்துக் கொல்வாய் என நினைத்தேன்..
ஆனால் எனக்கு கிடைத்ததோ
உன் அலட்சிய பார்வை மட்டுமே..

இன்று இந்த உலகமும்,
உன் அன்னையும் எனக்குத் தந்த பெயர்
"வேண்டா பொருள்"..

பரவாயில்லை,
உன் அன்னை தானே..

நான் உன்னை பிரிவதற்க்கு முன்,
இறுதியாய் ஒன்று,
அடுத்த பிறவியிலும்,
மீண்டும் உன் அன்பிற்குறிய
கிட்டு பொம்மையாகவே பிறக்க ஆசை..
அப்படி நேர்ந்தால்,
எப்போதும் போல் என்னை கட்டி அணைத்து
முத்தம் தருவாயா?
நான் சொல்வது எவையாவது உனக்கு கேட்கின்றதா??

அடுத்த சில மணித்துளிகளில்..
ஏதோ ஒர் வீதியில்,
அய்!!!! பொம்ம!!!
என்ற ஓசையுடன் இரு கரங்கள்,கிட்டுவை அரவணைத்தது..
சோப்பு நுறை காணா அவள்
பாவடை சட்டை கொண்டு,
கிட்டுவின் மேல் படிந்திருந்த
தூசியை துடைத்தாள்..
இல்லை இல்லை
கிட்டுவின் கண்ணீரைத் துடைத்தாள்..

No comments: