Sunday, June 6, 2010
கரையோரம் ஒதுங்கிய கவிதைகள்..
வழிந்தோடும் காதலை,
ஒரு போதும் நான் தவறவிட்டதில்லை..
நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் நம் கண்கள்..
அப்போது வெளியேறும் கண்ணீர்
பூமியில் தடம் பதிக்கும் முன்
என் இதழ்கள் அதனை இடம்பெயர்க்கும்..
அப்படி முறைத்து பார்க்காதே..
என்னால் இன்றும் தமிழோடு மல்லுக்கட்ட முடியாது,
உன்னை பற்றி கவிதை எழுதுவதற்க்கு..
ஒரு நாள் உனை வழி
மறித்து முத்தம் ஒன்றை பெற்றுக்கொண்டேன்..
உன்னை வழிமறிக்க வேண்டுமென்றே இப்போதெல்லாம் தனியாய் வருகிறாயோ??
தனிமைக்காய் உறவுகளை விரட்டியடித்து,
நம் இடைவெளி குறைக்கையில்,
உறங்கிய கவிஞன் விழித்துகொள்கிறான்..
இவனை எப்படி விரட்டி அடிப்பது..??
அலை அலையாய் தமிழ் சொற்க்கள்
அங்கும் இங்கும் அலைந்தோட,
கவிதையாய் மாறி கரை ஒதுங்கியது
உன் பாதம் கண்டவுடன்..
உறவுகளுக்கு இடையில் வளைந்தோடி,
தேடி அலைந்து தம்மைதம் இணைத்துகொண்டது நம் கண்கள்,
அழகாய் தெரிந்தது நம் காதல் கோலம்..
உன்னைப் பற்றி எனக்கு முன்
ஒருவன் கவி எழுதி வைத்துள்ளான்..
உன் உதட்டு வரிகளைத்தான் சொல்கிறேன்..
நான் படித்த சிறந்த சில வரிகளில்
உன் உதட்டு வரிகளும் அடங்கும்..
புத்த்கம் படிப்பதை நிறுத்திவிட்டேன்,
உன்னைப் படிக்க தொடங்கிய நாளிலிருந்து..
நீ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய்..
புத்தகம் உன்னை படித்துக் கொண்டிருந்த்து..
நீ பக்கங்களை திருப்புகையில்,
அதன் அழுகுரல் என் காதுகளில்..
Friday, March 5, 2010
To My Friend..2010
என் தோழிக்குப் பிறந்தநாள்..
என் ஆறாண்டுகால நட்பின் அடையாளம் இவள்..
இவளுக்காய் என்ன கொடுக்க?புத்தகம்?அவளுக்கு ஆர்வம் இல்லை அதில்..
கட்டி தழுவ ஒர் கரடி பொம்மை??இல்லை வேண்டாம்..
சரி இந்த அவசர யுகத்தில் அவளிடம் எப்படி இதை சேர்ப்பது..?
உடைந்தது இந்த முயற்சிகள்..
அடுத்து என்ன என நான் இருந்தேன்..
Happy birthday..
Many more happy returns of the day..
Birthday Wishes..
என வழக்கமான வாழ்துக்களோடு அகப்பட விரும்பவில்லை என் சொற்களும் என் வாழ்த்தும்..
ஆறுதல் கூற அருகில் அமரந்தது தமிழ் வார்தைகள்..
என் காகித மடலை அலங்கரிக்க ஆயத்தமாகிறது என் தமிழ்..
அவள் காதுகளை முத்தமிட தொடங்குகிறது அதன் பயணத்தை..
இன்று Mar 4..
இறைவன் வரைந்து வைத்த ஓவியத்திற்க்கு
உயிர் கொடுத்த தினம்..
உன் பிஞ்சு கதறல் இப்பூமியை
தொட்ட தினம்..
வாழ்வென்னும் நாடக மேடையில்,
அரிதாரம் பூசி நடிக்க தொங்கிய தினம்..
என் உணர்வுகளை மதிக்கும்
மற்றும் ஒர் உயிர் பிறந்த தினம்..
என் வார்தைகளை கேட்க்கும் செவிகளுக்கு ஒர் வயது மூப்பு..
என் புன்னகையை பகிர்ந்து எடுக்கும் உரிமை பெற்றவளின் பிறந்த நாள்..
இத்தனை ஆன்டுகளில் நீ,
கண்ணீரில் கரைந்தாய்..
புன்னகையில் மலர்ந்தாய்..
முட்களை முத்தமிட்டாய்..
மலர்களில் வாசம் செய்தாய்..
இனி போர் முனையில் நாம்..
போர் வாளை தீட்டிக்கொள்..
போர் தந்திரங்களை மறாவதே..
புன்னகையோடு போரிடு..
புதிதாய் பிறப்போம் தினமும்..
அடித்தல் திருத்தலுடன் எழுதிய
நாட்களை மாற்றி எழுது..
இனி தினம்,
ஒரு கவிதையாய் பிறந்து விடு..
ஒரு புன்னைகையேனும் விலைக்கு வாங்கு..
கவலைகளை கண்ணியமாய் கடத்தி விடு..
உறவுகளுக்கு உயிர் கொடு..
உயிர்களுக்கு உதவி கொடு..
உன் தோட்டத்தில் பூக்கும்
ஒவ்வொரு பூக்களையும் ரசனையோடு சூடிக்கொள்..
(Meant to say about each day in your life)
ஒய்ந்து உதிரும் பூக்களின் கதைகளை கேட்க
என்றும் ஆவலாய் காத்திருக்கும் உன் நண்பன்..
(From Previous year :) )
இன்றோடு ஓர் ஆண்டில்,
வாழ்வோடு போராடி,எவ்வாறு சிதறி போவோம் என அறியாத போதும்,
இனி உரிமையோடு வாழ்த்து சொல்ல,
இனியொரு ஆண்டும் கிடைக்கும் என உறுதி இல்லை..
காலத்தோடு சுழன்று மீண்டும் நாம் சந்திப்போம் ஆயின்
அடுத்த ஆண்டும் உறிதியாய் வருவோம் நானும் என் கிறுக்கல்களும்..
Tuesday, April 28, 2009
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பல ஆண்டுகளுக்கு முன்னால் விதைத்த விதை,
இன்று உன் உருவில் மரமாய் நிற்க,
உன் நிழலில் குளிர் காயும் உன் நூறு நண்பர்களில் நன்றி மறவாமல்
வாழ்த்து கூற வரிசையில் காத்து நிற்க்கும்
நானும் என் வார்த்தைகள் இங்கே..
நள்ளிரவு நேரம்..
ஊர் உறங்கும் சமயம்..
உனக்காய் கவிதை எழுத துடிக்கும்
என் கரங்களுக்கு,தமிழும் உதவி செய்ய..
தங்க மடல் ஒன்றை தரை மீது வைக்கிறேன்..
ஓய்வு எடுத்த கதிரவன்
மெல்ல எட்டி நின்று உனை பார்க்க..
இன்று பூக்க மறுத்த பூக்கள் எல்லாம்,
நாளை உனக்காய் மலர்ந்திட..
சோம்பல் முறித்து தொடங்கி விடு
உன் புதிய ஆண்டை..
இயற்கையின் நியதியில்,நானும் வேறல்ல என உறக்க சொல்லி
பூமி மிதித்த ஓர் உயிரே..
உன்னை நேசிக்கும் உயிர்கள் எல்லாம்
உன் நினைவில் வந்து போகும் தருணம் இது..
வாலிபம் போகிறது என நாசுக்காய் சொல்லும் தினம் இது..
உன் நாடக மேடையில் இன்று
புதுதாய் ஓர் அரங்கேற்றம்..
உனக்காய் உரிமையோடு சில வார்த்தைகள்..
சிறகு விரித்து பறந்து விடு..
சிந்தனைக்கு வழி விடு..
புன்கையின் கணக்கை கூட்டிக்கொள்..
காலம் கடந்து செல்ல வழி விடு..
வாணளாவு கனவு காண்..
கடலளவு அதை நிறைவேற்று..
ஓய்ந்து போகாதே,
உயரங்கள் இனியும் உண்டு,பயணங்கள் பலவும் உண்டு..
நாட்களை அத்தியாயங்கள் ஆக்கு..
வருடங்களை காவியங்கள் ஆக்கு..
கண்ணீர் கரை ஏற்று..
கர்வம் கொள்..
உறவுகளில் கரைந்து போ..
மகிழ்ச்சியில் மறைந்து போ..
இன்றோடு ஓர் ஆண்டில்,
வாழ்வோடு போராடி,எவ்வாறு சிதறி போவோம் என அறியாத போதும்,
இனி உரிமையோடு வாழ்த்து சொல்ல,
இனியொரு ஆண்டும் கிடைக்கும் என உறுதி இல்லை..
காலத்தோடு சுழன்று மீண்டும் நாம் சந்திப்போம் ஆயின்
அடுத்த ஆண்டும் உறிதியாய் வருவோம் நானும் என் கிறுக்கல்களும்..
இப்படிக்கு ,
பிரேம் குமார்
Friday, November 2, 2007
நட்பு
வினாகளுக்கும் அடங்கியதல்ல
நம் நட்பு..
காதல் கொடுத்த கண்ணீரை
உன் தோள்களில் துடைத்தேன்..
விதி எழுதிய தீர்ப்புகளில்
நாமும் தண்டிக்கப்பட்டோம்..
ஆம் இது பிரியும் தருவாய்..
சொந்த பந்தமெல்லாம் ஏலன பார்வை பார்க்க,
தோள் தட்டி துணை நின்றாய்..
அவர் தன் பொறாமை பார்வையின் இடையில்,
என் வெற்றிக்கண்டு
எட்டி நின்று புன்னகை பூத்தாய்..
பணம் பார்த்து வந்த பந்தம் ஆயிரம் வேண்டாமடா
என் மனம் பார்த்து வந்த உன் ஒரு சொந்தம் போதுமடா..
உயிர் கொடுப்பன் தோழன் என்பது வேண்டுமெனின் பொய்யாய் தோன்றலாம் சிலருக்கு..
உண்மையான மனம் கொடுப்பான் தோழன் என்பது நிச்சயம் உண்மை..
இன்றைய போட்டியும்,பொறாமையும் நிறைந்த இவ்வுலகில்
அவை கிடைப்பதே அரிது..
நம் நட்பிற்க்கும் கற்புண்டு..
ஆயிரம் ஆராவரத்திற்க்கும்,மகிழ்சிக்கும் மத்தியில்
என்னால் உன் பாதையும்
உன்னால் என் பாதையும்
மாறாமல் பார்த்துகொள்வோம்..
ஆயிரம் அலுவலுக்கு மத்தியில்,
ஒரு நிமிடம்,
ஜன்னல் வழியே அண்னாந்து பார்க்கும் என் பார்வை,
அப்போது கடந்து செல்லும் மேகங்களோடு
உன் நினைவுகளும் கடந்து போகும்..
அந்த ஒரு நிமிடம் போதும்
நம் நட்போடு நடை போட..
கிளையில்லா மரமொன்றும்
நிழழொன்று கொடுக்காது..
நல்மனமில்லா நட்பென்றும்
நெடுந்தூரம் நிலைக்காது..
காதலில் மட்டுமே வலி என்று சொன்னவன் காதில்
உரக்கச் சொல்,
நட்பிலும் காதல் உண்டு,
பிரிவிலும் வலி உண்டு என்று..
காதல் விளையாட்டு
உன் ஓர விழி பார்வையும்
இணைந்த அந்த பாதையில்
நம் காதல் பயணம் தொடங்கியதே!!
உன்னால்,
கவிதையும்
காதலும்
இன்று கட்டித் தழுவியதே!!
உன்னை நினைத்து கரைத்த
நிமிடங்களை நினைத்து
கரைந்தே போகிறேன்..
சத்தமின்றி நுழைந்தாய்..
சலனமின்றி சாகிறேன்..
என் எழுதுகோலுக்கும்
காதலிக்க கற்றுக் கொடுத்துச் சென்றாய்..
காதல் தேவனின் மடியில் சாய்வதாய் நினைத்து,
மரண தேவனின் மடியில் மடிகிறேன்..
உன் விரல் பிடித்து நடக்க ஆசை இல்லை எனக்கு,
உன் விழி பிடித்து நடக்கவே பிரியப்படுகிறேன்..
படிக்க அமர்ந்தபோது,
என் சிந்தை எல்லம் சிதறிப்போக
சிதறிய பாகங்களில் எல்லாம் உன் முகம்..
கவிதை எல்லாம் கை வந்த கலை,
உன்னை காணும் முன்..
இப்போதெல்லாம் வார்த்தைகளும் என்னுடன்
வம்பிழுக்கின்றன,உனக்காய் மட்டுமே கவிதை எழுதிகிறேன் என்று..
நேரம் போவது அறியாது
வரம்பு மீறி நிற்கிறது என் பார்வை,
உன் அழகு முகத்தின் மீதே
உன் தந்தை அருகில் இருக்கிறார்
என்பதை கூட அறியாமல்..
உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்தே
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கிறேன்
இதுதன் காதல் ஆடும் ஆட்டமோ..??
Tuesday, August 7, 2007
ஒரு நாள் நீ.......
அதன் மகரந்தம் உந்தன் சுவாஸத்துடன் ,
போராடி போராடி,தோற்றுப் போக கண்டேன்..
ஒரு நாள் நீ மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்தாய்..
உன் பஞ்சனை தேகம் ,
நீ உறங்கும் பஞ்சு மெத்தை எடையுடன் போட்டி போடும்..
ஒரு நாள் நீ,
என் காதோரம் சொன்ன சில வார்த்தைகள் எல்லாம்
என் நெஞ்சோரம் பச்சைக் குத்திக்கொண்டது..
ஒரு நாள் நீ
பூக்களின் மத்தியில்,
கண்ணத்தில் கை வைத்து அமர்ந்து பூக்களை ரசித்துக்கொண்டிருந்தாய்..
தேன் உரிஞ்ச வந்த பட்டாம்பூச்சீகள்
"அட இது என்னடா புது வகை பூ??
இது வரை நாம் கண்டதில்லையே??"
என முணுமுணுத்தது ,என் காதுகளிலிருந்து தப்பவில்லை
ஒரு நாள் நீ குறும்பு செய்த தம்பியரை கடிந்து கொண்டிருந்தாய்..
முதல் முறையாய் ,சிவந்த நிலவை அன்று தான் கண்டேன்..
ஒரு நாள் நீ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய்..
ஒவ்வொரு முறை நீ பக்கங்களை திருப்பும் பொழுதும்
அப்பக்கங்களின் கதறல் என் காதுகளில்..
ஒரு நாள் நீ பரமபதம் விளையாடிக்கொண்டிருந்தாய்..
தாயம் போட நீ கடவுளை வேண்டி உருட்டும் பொழுதும்
என் இதயமும் சேர்ந்து அல்லவா உருண்டது..
ஒரு முறை நீ குளித்து முடித்து தலை துவட்டிக்கொண்டிருந்தாய்..
அப்போது உதிர்ந்த தண்ணீர் துளிகள்,
அடை மழை பெய்து,இலைகளில் இருந்து ஒழுகும் இறுதி துளிகள் போல..
ஒரு நாள் நீ உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு வெளியே வந்தாய்..
ஏழு வண்ணங்களில் வானவில் காட்டாத அழகு,
உன் ஒற்றை உதட்டுச்சாயம் காட்டி விட்டது..
ஒரு நாள் நீ கல்லூரி வீதி வழியே நடந்து போய்க் கொண்டிருந்தாய்..
அறிவியல் படிக்க செல்லும் உன்னிடமிருந்து,
காதல் பாடம் படித்து கொண்டிருந்தனர் மாணவர்கள்..
ஒரு நாள் நீ என நான் எழுதிய கவிதைகள் யாவும்,
ஒரு நாள் நாம் என மாறக்கூடும் தினம்
வெகு தொலைவில் இல்லை..
மீண்டும் மீண்டும் காதலித்தேன்..
என் இதயம் முனுமுனுத்தது
"வெண்ணிலவை வீதியில் உலவ விட்டது யார்?"
சதையால் செய்த இதயம் கொண்டதால் தானோ
கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாய்??
இரும்பால் செய்த இதயத்திற்க்கு
நான் எங்கு போவேன்??
உன் பார்வை சொட்ட சொட்ட ,
உன்னுள்ளே மூழ்கி போனேன்..
அன்பின் மிகுதியும்,ஆயுளின் பகுதியும்
சேர்த்து தருவேன். உன் காதலுக்காக..
நிமிட முள்ளுடனும்,நொடி முள்ளுடனும்
போராடி வென்று
தினமும் உந்தன் பூ முகம் காண
காதலுடன் காத்திருப்பேன்..
அன்று நீ தவற விட்ட பேருந்தைப் பிடிக்க ஓடோடி வந்தாய்..
போர் முனையில் பூக்களெல்லாம் ஒன்றாய் என்னை
கொல்ல வருவது போலே இருந்தது..
சமாதான தூதாக என் இதயம் கொடுத்து அனுப்பினேன்..
நம் சமரச உடன்படிக்கையில் நீ கையெழுத்து இடுவது எப்போது??
உன்னை காதலிக்க வேண்டும்..
இப்போதே காதலிக்க வேண்டும்..
பவுர்ணமி இரவில்
யாரும் இல்லா தீவில்
நிலவோடு உன்னை சேர்த்து அணைத்து
நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு
காதலிக்க வேண்டும்..
மழையில் நீ நனைந்து வருகையில்
உன் தலை துவட்டி ,
உன் தலை கோதி ,
உன்னை காதலிக்க வேண்டும்..
என்னோடு கோபம் கொண்டு
விலகி போகையில்
உன்னை சமரசம் செய்து காதலிக்க வேண்டும்..
என் இதயம் உன்னை நினைத்து நினைத்து துடித்த அத்தனை கணமும்
மீண்டும் மீண்டும் உன்னை காதலித்தேன்..