Saturday, April 14, 2007

கல்லூரி நாட்கள்..

கல்லூரி நாட்கள்..
இலைகளாய் நுழைந்தோம்!!
மரங்களாய் நிற்கின்றோம்!!
வேர்களாய் நம் நட்பு!!
நாட்காட்டியில் தேடி கொண்டிருக்கிறேன்
நாம் சிரிக்க மறந்த நாட்களை,
அட என்ன விந்தை
நான்கு ஆண்டுகளாய் அதற்கு விடுமுறை!!
கல்லூரி அத்தியாயத்தில்
முற்று புள்ளி வைக்கும் அந்த கடைசி தினத்தில்
கண்ணீரை கொண்டு அதை தொடர் கதை ஆக்க முயன்று
தோற்றுப் போனேன்..
அவர்கள் தந்த பாடம் எல்லாம் படித்தே முடித்தோம்
மதிப்பெண் பெற்றோம்!!
இலவச இணைப்பாய் மனித மனங்களையும் படித்தோம்
நண்பர்கள் பெற்றோம்!!
சில மனங்களை படிக்க முயன்று தோற்றோம்!!
இன்றோ அத்தோல்விகளை நினைத்து சிரிக்கும் தருணம்!!
அந்த நாட்களில்
படித்து
படித்து
களைத்த கண்களுக்கு
அப்பகுவமற்ற காதலால் கிடைத்த
அவள் முகமும்
அவள் மறந்து விட்டு போன கைக்குட்டையுமே ஆறுதல்!!
அந்த நாட்களில்
எல்லாமே என்னிடம் என்னும் ஓர் எண்ணம் ..
கல்லூரி முடித்து திரும்பி பார்த்தேன்,
ஆள் இல்லா வீதியில் நான் மட்டுமே என்னும் ஓர் எண்ணம் ..
தேனீக்களுக்கு சவால் விடும் பருவம் அது!!
என்ன ..
தேன் உரிஞ்ச மட்டும் பக்கத்து வகுப்பறைக்கு செல்வோம்!!
கவிதை எழுதப்பட்ட மேசைகளுக்கும்..
நய்யான்டி கதைகள் எழுதப்பட்ட சுவர்களுக்கும்..
வண்ணம் தீட்டி மறைத்து விட முடியும்..
இதயத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை மறைக்க ஏது வண்ணம்??

அவள் உறங்குகிறாள்.....

நிலவு சாய்ந்தது..

ஒரு நாள் உற்சாகம்
முற்று பெற்று
"அசதியாய் இருக்கிறது டா " என
வெள்ளி தாமரை மெத்தை சாய,

உதட்டோரம் எறும்பு ஊர
சக்கரை கட்டி சுமந்து சென்றதை கண்டேன் அடி !!
ரணத்தில் நீ சிணுங்க
என் இதழ்கள் ரெண்டும் உனக்கு
பச்சை வைத்தியம் செய்தேனடி !!

ரோட்டோர கொசுக்கள் எல்லாம்
தேனீக்களாய் மாறியதேன்..??
உந்தன் தேன் குடிக்க வந்த போது
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்..

கண்மணி நீ உறங்க
பகலிலும் நிலவொன்றை
வாடகைக்கு எடுப்பேன்!!

குளிரும் உனை மெல்ல தீண்ட
கங்காரு போலே அடை காப்பேன் !!

கடவுள் கண் முன் தோன்ற
வரம் ஒன்று கேட்பேன் ,
உன் முகம் ஒன்று காண
சிலை ஆக்கி விடு என்று!!

சிறந்த பூக்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து
இதழ்கள் எல்லாம் சேர்த்து தைய்து
மெத்தை ஒன்று நான் செய்வேன்
வெண் மேகம் நீ தூங்க!!

சூரியன் உதிக்க தலை எடுக்க
அதன் தலையில் ஓர்
தட்டு தட்டி நான் அமர்வேன் !!

விண்ணில் பறக்க சிறகை விரிக்கும் பட்சிகளுக்கெல்லாம்
விடுமுறை கொடுத்து கூட்டில் அடைப்பேன்!!

வேதனை அற்ற முத்தம் ஒன்றை
நெற்றிப்பொட்டில் நான் குடுக்க
கண்விழித்து நீ பார்க்க
"இன்னும் நீ தூங்கலயா டா "என கேட்க
மீண்டும் ஒரு தாய் மடி வேண்டும் என உன் மடி சாய்வேன்!!

Thursday, March 8, 2007

சகோதரன் உறவு..

சகோதரன் உறவு..

உன்னிடம் ஒரு
சிறப்பு உள்ளது..
உன்னுடைய வன்முறையை
மட்டும் பல வருடங்களாய்
"மகிழ்ச்சியோடு" நினைவுகூறுகிறேன்..

நீ வானவில்லின் உதாரணம்..!
வானம் அழுது முடித்த பின்
நீ மட்டும் வண்ணமாய் ஒளிர்கிராய்..
வானமாய் நான்..
வானவில்லாய் நீ..
உன் பேச்சும்,நம்பிகையும் எனக்குள் வண்ணமாய்..

சேற்றில் புரண்டும்..
பேய் கதைகள் கேட்டும்..
குறும்புகள் செய்தும்..
ஒன்றாய் வளர்ந்தோம்..
ஆனால் நான் தாமதமாய் வந்து
பெற்றோரின் செல்லம் பெற்று விட்டேன் பார்த்தாயா??
இந்தப் பந்தயத்தில் தாமதமாய் வருபவருக்கே
அன்பு மிகுதி..

சகோதரன்..
அப்படி ஒரு உறவு நம்மிடம் இருந்திருந்தால்
என் பெற்றோறும் என்னிடம் கண்டிராத வலிகளை
உன்னிடம் கொடுத்திருக்க மாட்டேன்..
நீ சகோதர உறவோடு இலவச இணைப்பாய் கிடைத்த தோழன்..

உன்னுடன் இருக்கையில்
மகிழ்ச்சியும்,
ஆனந்தமும்,
கேலியும்,
குறும்பும்,
வாதமும்,
கோபமும்,
சோகமும்,
பரிமாற்றமும்
நம்மிடையே நேசம் என்னும் கயிற்றில்
ஊஞ்சல் கட்டிக் கொண்டு ஆடும்..

Saturday, March 3, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

21 ஆன்டுகளூக்கு முன்னால்..
இதே நாளில்
பிஞ்சுக் கதறலுடன் பிறந்தாய் நீ..
யவரையும் தெரியாது அப்போது உனக்கு..

இன்று அதே நாள்..
ஆம் இன்று உனக்குப் பிறந்தநாள்..

இன்றும் நீ ஒரு குழந்தையே..
ஆனால் இன்று நீ..
நிகழ்காலத்தின் மகிழ்ச்சியிலும்..
எதிர்கால்த்தின் ஆர்வத்திலும்..
உன்
தாயின் அரவணைப்பிலும்..த
ந்தையின் கண்டிப்பிலும்..
தம்பியின் சில்மிஷத்திலும்..
பூக்களோடு கடந்து கொண்டிருக்கிறாய் உன் பாதையை..

நானும் உன் பாதையில் ஒரு மைல்க்கல்லே
உன் பாதையில் பூக்கள் மட்டுமே இருக்க வாழ்துக்கிறேன்..
பாதையில் தெளிவு இல்லையென்றால் திரும்பி வராதே..கவலைக்கொள்ளாதே..
நான் மீண்டும் எழுவேன் ஒரு மைல்க் கல்லாக உனக்கு உதவ..

கடலைப் போல் மகிழ்சியும்..
வானம் போல் நிம்மதியும்..
உன் வாழ்வில் கிடைக்க வேண்டுகிறேன்..

கடலும்
காற்றும்
உள்ள வரை
நீ பிறந்த நாள் கொண்டாட வேண்டுமென விரும்புகிறேன்..

உனக்கு இன்று கிடைக்கும்
பூங்கொத்து வாழ்துக்களோடு
இவ்வொற்றை ரோஜா
வாழ்த்தையும் பெற்றுக்கொள்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இப்படிக்குபிரேம் குமார்..

எனக்கு கவிதை எழுதத் தெரியாது

எனக்கு கவிதை எழுதத் தெரியாது..
உலகில் உள்ள
கவிஞர்கள்,
புலவர்கள்
வர்ணிக்காத ஒன்றைப் பற்றி நான் வர்ணிக்கப்போவதில்லை
என் கவிதைக் கொண்டு..
ஆனால்

அவர்கள் வர்ணிக்க தொலைத்த வரிகளை
உன் இதழ்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த தாஜ்மகால் தூண்களை
உன் விரல்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த இரண்டு கருப்பு நிலாக்களை
உன் கண்களில் கண்டேன்..

கவலைப்படாதே கண்மனியே..
மறுபிறப்பு என இருந்தால்
மீண்டும் பிறப்பேன்..
உன்னைப்பற்றி வர்ணிக்க!!
உன்னைப்பற்றி மட்டும் வர்ணிக்க!!

பேருந்து தேவதை..

1.
நள்ளிரவு 12:00 மணி..!
மனைவியின் முதல் பிரசவ வேதனையை
காதில் கேட்டுக் கொண்டு நிற்க்கின்ற
கணவனைப் போல..

இந்த வருடமேனும் வான்மழை
பூமிப்பந்தை முத்தமிடாதா?
என ஏங்கும்விவசாயி போல..

இதழ்களுக்கும் சுவாசக் குழலுக்கும் உள்ள இடைவெளியில்
காம்பு முடி முளைக்காதா?எனக் காத்திருக்கும்
பாலகனைப் போல..

தாயின் நிழல் கருவிழிகளுக்கு எட்டாதா?
எனபசியில் இருக்கும் குழந்தைஅழுவது போல..

கிடந்தேன்..!கிடந்தேன்..!

உடலை பூமியிலும்உள்ளத்தை நிலவிலும்
தடம் பதித்து கிடந்தேன்..!
ஆம் நாளை காலை என்னவள்
பதில் கூறப் போகிறாள்..
நான் காகிதத்தில் கொடுத்த என்
இதயத்திற்கு..

மறுநாள்:
விடிந்தது..!
ஏனோ காக்காய்,குருவிகளுக்கும்
என்னவளின் முடிவு கேட்கும் ஆர்வத்தில்
வேகமாய் துயில் எழுந்ததாய் தோன்றியது..

முக்கால் சொம்பு தண்ணீரில்
நனைந்தும் நனையாமலும்
குளித்து முடித்தேன்..

தாயின் அரை கோப்பைத் தேனீரின்
அன்பையும் உதாசினப்படுத்தி
வீதியை நோக்கி 100 மைல்
வேகத்தில் செல்ல முனைந்தேன்..!

வீதியில்..!!
அழையா விருந்தாளி போல்
நண்பன்..
சில்லென்று சிதறியது
என் பாதங்கள் வேறு பாதை நோக்கி..

ஒரு வழியாக பூலோகச் சொர்கத்தை அடைந்தேன்..
ஆம்..அது தான் நான் அவளை தினமும்
சந்திக்கும் பேருந்து நிலையம்..!

என் கடிகாரம் அன்ன நடை இடுவதை
வருத்ததோடு நோக்கிக் கொண்டு இருந்தேன்..

இதோ காலைப் பொழுதில் மொட்டு
விரிவதைப் போல் என் சிற்பம் மெல்ல
மெல்ல நடந்து வந்துகொண்டிருக்கிறது..

2.
முதல் நாள்..

நேரமாகியும் வராத
பேருந்தை திட்டியபடி
திரும்பியது என் பார்வை எதிர் திசை நோக்கி..!

இன்று பகலில் பவுர்னமி போலும்..
பிரகாசமாய் இருந்தது அவள் வரும் திசை..

இதயம் பதை பதைத்தது..
அவள் நான் நிற்கும் பேருந்து நிலையம்
நோக்கி மிதந்து வருகிறாள்..

இதயம் அவள் நடை அசைவிற்க்கு
எற்றாற் போல் தபேலா வாசித்தது..

திட்டிய என் இதழ்கள் வேண்டியது..
ஓடுனர் கடவுளாக..!நான் பக்தனாக..!
இன்று முதல் இப்பேருந்துதாமதமாகவே வர வேண்டும் என்பது என் வேண்டுதலாக..!

யார் இவள்??
விண்ணிலிருந்து விழுந்த நட்ச்சத்திரமோ??
அல்ல நிலவின் ஒரு துண்டோ??
தெரியவில்லை..
ஒன்று மட்டும் விளங்கியது..
இவள் பிரம்மனை ஏழையாக்கி பிறந்திருக்கிறாள்..

அவளென்னும் நிலவில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்..
அவள் சிரித்தாள்..
என் இதயம் சிதறியது..
சிதறிய துண்டுகளை சேகரிப்பதற்க்குள்என் உயிரைப் பிரியும் தருணம் வந்து விட்டது..
ஆம்..
நான் ஏற வேண்டிய பேருந்து கண்ணில் பட்டது..

[தொடரும்..]

3.
கணப் பொழுதில் என் காதலை
என் இதயத்திலிருந்து வேரோடு
பிடுங்கி விட்டதாய் ஒரு எண்ணம்..!!
அட!! எப்போது என் இதயத்தில்
"காதல்" என்னும் வார்த்தை வேரிட்டது??
ஓ..!!இது தான் கண்டதும் காதலோ?

பண்டமாற்று முறை நடந்து
கொண்டிருக்கையில் இடையூரு செய்தான் கண்டக்டர்
"வேகமாய் இறங்குங்கள்" என குரல் எழுப்பி..
ஆம்..பண்டமாற்று முறையே!!
என் இதயத்தை கொடுத்து விட்டேன்..
அவள் காதலை மாற்றாய் பெற காத்திருகின்றேன்..

சற்றும் சலனமில்லாமல்
என்னைக் கடந்து சென்றாள்..!
நீ கடக்கையில் உன் அழகு
என்னை வீழ்த்திவிட்டதாய்
கேலி செய்வதைப் போல் தோன்றியது..!

பூக்கள் மொத்தமும்
ஊர்வலம் போவதை இன்று தான் கண்டேன்..


நான் மீண்டும் மீண்டும் வீழ்வதில்
ஆண்டவனுக்கும் விருப்பம் போலும்..!
ஆம் அவளும் என் பேருந்து ஏறினாள்..


4.

வீழ்வதிலும் இன்பம் தான்..!
வீழ்வது உன் அழகில் தானே..
என்ன காயங்கள் மட்டும் என் இதய்த்திற்க்கு..

அவள் இசைத்த முதல் இசை
"இந்த பஸ் பீச் ரோடு போகுமா?"
அது தான் என் காதில் அன்று ஒலித்த கடைசி ஒலி!!


வேடந்தாங்கல் விருந்தாளி, ஊர்
செல்வதைப் போல் இறங்கிச்
சென்றது என் பறவை
அவள் நிறுத்தம் வந்ததும்..!!

அன்று என் பணிமுடித்து
திரும்புகையில் ரசித்தேன்..
தேன் உறிஞ்சும் பூக்களை!!
மழலையின் சிரிப்பை!!
தென்றலை!!
இசையை!!
குழாய் அடி சண்டையும்
குழல் ஊதுவதாய் ஒலித்தது என் காதில்!!

இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்??
கேட்டது மனம்..!!
இவைகள் காதலியோடு வந்த
இலவச இணைப்பா??
அவைகள் சொன்னது
"வாழ்வை ரசிக்க தெரிந்தவனுக்கு
கயிற்றுக் கட்டிலும் பஞ்சு மெத்தையே..
ஒரு செம்பு கூழும் கோழி குழம்பே..
இன்று தான் நீ ரசிக்க தொடங்கியிருக்கிறாய்.."
ஆக என்னை ரசிக்க வைத்தவளும் அவள் தானோ??

இது காதலா??இல்லை காமமா??
காமம் என்றால் என் கண்கள் அவளை கற்பப்ழிப்பு தானே செய்திருக்கும்??
ஆனால் இல்லையேநான் அவளை தரிசிக்கத் தானே செய்தேன்??
[தொடரும்]

5.

இரவில்..
இரயில் பயணத்தில் பின்னோக்கி
செல்லும் மரங்களைப் போல
பின்னோக்கி பயணம் செய்து
கொண்டிருந்தேன் காலப் பயணத்தில்
அவள் கண்களை மீண்டும் காண..

உன்னிடம் கேட்கவில்லை
நீ என்னிடம் களவாண்ட
நிமிடங்களை திருப்பி தா??என
மீண்டும் எப்போது களவாடுவாய்?? எனவே கேட்கின்றேன்..

மறுநாள்..
காதல் தேவன் உரசிச்
சென்றதில் கவிதையும் பிறந்தது..
"வலப் புள்ளி நான்..
இடப் புள்ளி நீ..
காதல் என்னும் மூன்றாம் புள்ளியில்
முழுமையடைந்தது நம் எழுத்து..
இது ஆய்த எழுத்து அல்ல..
நம் உயிர் எழுதிய உயிர் எழுத்து..

"தேவதை ரதத்தில்
ஊர்வலம் செய்வதை
காணக் காத்திருக்கும் பக்தனை போலவே
தினமும் நம் பூலோக சொர்கத்தை வந்தடைகிறேன் வேகமாய்..

இப்படியே தினமும் பூக்கின்றேன்..
என்றோ ஒரு நாள்
நீ தேன் உறிஞ்ச வருவாய் என..
கொடுத்து வாழ்வதில் இன்பம் தான்
என்னும் தத்துவத்தில் சங்கமிக்க..

இதயத்தின் கனம்கூடி விட்டது..
உன்னுடய காதலையும்
சேர்த்து சுமக்கிறேன் அல்லவா??

6.

என் நாட்காட்டியில் மொத்தம்
261 நாட்காளே..
சனியும்,ஞாயிறும் நாடு கடத்தப்பட்டனர்
என் நாட்காட்டியில்..

என்னுடன் வா..
இருவரும் சேர்ந்து ஒரு ஆயுளை பகிர்வோம்..

சூரியன்க்கும்,சந்திரனுக்கும் இடையில்
ஊஞ்சல் கட்டி
உல்லசமாய் கழிப்போம் நம் பொழுதை..

ஒரே கோப்பையில்
தேனீர் அருந்துவோம்..
ஒரு வாய் நீ..
ஒரு வாய் நான்..
இருவரது எச்சிலும் கலக்கட்டும்..
அளவுக்கு மிஞ்சி அமிர்தம் உண்டு
காதல் கடலில் மூழ்கி இறப்போம்..

அடை காப்பேன் உன்னை..
நிலாச் சோறு ஊட்டுவேன்..
நீ சினுங்குகையில் முத்தங்கள் கொடுப்பேன் லஞ்சமாய்..
உன் தாயிர்க்குப் பிறகு
மீண்டும் உன்னை சுமக்க விரும்புகிறேன் ஒரு தாயாக..

என் பாதையில்
மைல் கல் அல்ல நீ..
நான் செல்லும் பாதை நீ..

அனைத்தையும் சொல்ல நினைக்கிறது மனம்..
ஆனால் உன்னைக் காண்கையில்
சொற்கள் அனைத்தும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஒளிந்து கொள்கிறது..
என்னையும் கொல்கிறது..

இப்போதைக்கு என் கண்கள் மட்டுமே என் மொழியாய்..
நாளை கண்டிப்பாய் உன்னிடம் பேசி விடுவேன் என்பது என் நம்பிக்கையாய்..

கனவு

கனவு::::

நிழல்களை
நிஜமாய் காண
நிஜத்தில்
தோன்றும்
நிழல்..