Thursday, March 8, 2007

சகோதரன் உறவு..

சகோதரன் உறவு..

உன்னிடம் ஒரு
சிறப்பு உள்ளது..
உன்னுடைய வன்முறையை
மட்டும் பல வருடங்களாய்
"மகிழ்ச்சியோடு" நினைவுகூறுகிறேன்..

நீ வானவில்லின் உதாரணம்..!
வானம் அழுது முடித்த பின்
நீ மட்டும் வண்ணமாய் ஒளிர்கிராய்..
வானமாய் நான்..
வானவில்லாய் நீ..
உன் பேச்சும்,நம்பிகையும் எனக்குள் வண்ணமாய்..

சேற்றில் புரண்டும்..
பேய் கதைகள் கேட்டும்..
குறும்புகள் செய்தும்..
ஒன்றாய் வளர்ந்தோம்..
ஆனால் நான் தாமதமாய் வந்து
பெற்றோரின் செல்லம் பெற்று விட்டேன் பார்த்தாயா??
இந்தப் பந்தயத்தில் தாமதமாய் வருபவருக்கே
அன்பு மிகுதி..

சகோதரன்..
அப்படி ஒரு உறவு நம்மிடம் இருந்திருந்தால்
என் பெற்றோறும் என்னிடம் கண்டிராத வலிகளை
உன்னிடம் கொடுத்திருக்க மாட்டேன்..
நீ சகோதர உறவோடு இலவச இணைப்பாய் கிடைத்த தோழன்..

உன்னுடன் இருக்கையில்
மகிழ்ச்சியும்,
ஆனந்தமும்,
கேலியும்,
குறும்பும்,
வாதமும்,
கோபமும்,
சோகமும்,
பரிமாற்றமும்
நம்மிடையே நேசம் என்னும் கயிற்றில்
ஊஞ்சல் கட்டிக் கொண்டு ஆடும்..