Saturday, April 14, 2007

அவள் உறங்குகிறாள்.....

நிலவு சாய்ந்தது..

ஒரு நாள் உற்சாகம்
முற்று பெற்று
"அசதியாய் இருக்கிறது டா " என
வெள்ளி தாமரை மெத்தை சாய,

உதட்டோரம் எறும்பு ஊர
சக்கரை கட்டி சுமந்து சென்றதை கண்டேன் அடி !!
ரணத்தில் நீ சிணுங்க
என் இதழ்கள் ரெண்டும் உனக்கு
பச்சை வைத்தியம் செய்தேனடி !!

ரோட்டோர கொசுக்கள் எல்லாம்
தேனீக்களாய் மாறியதேன்..??
உந்தன் தேன் குடிக்க வந்த போது
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்..

கண்மணி நீ உறங்க
பகலிலும் நிலவொன்றை
வாடகைக்கு எடுப்பேன்!!

குளிரும் உனை மெல்ல தீண்ட
கங்காரு போலே அடை காப்பேன் !!

கடவுள் கண் முன் தோன்ற
வரம் ஒன்று கேட்பேன் ,
உன் முகம் ஒன்று காண
சிலை ஆக்கி விடு என்று!!

சிறந்த பூக்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து
இதழ்கள் எல்லாம் சேர்த்து தைய்து
மெத்தை ஒன்று நான் செய்வேன்
வெண் மேகம் நீ தூங்க!!

சூரியன் உதிக்க தலை எடுக்க
அதன் தலையில் ஓர்
தட்டு தட்டி நான் அமர்வேன் !!

விண்ணில் பறக்க சிறகை விரிக்கும் பட்சிகளுக்கெல்லாம்
விடுமுறை கொடுத்து கூட்டில் அடைப்பேன்!!

வேதனை அற்ற முத்தம் ஒன்றை
நெற்றிப்பொட்டில் நான் குடுக்க
கண்விழித்து நீ பார்க்க
"இன்னும் நீ தூங்கலயா டா "என கேட்க
மீண்டும் ஒரு தாய் மடி வேண்டும் என உன் மடி சாய்வேன்!!

No comments: