Saturday, March 3, 2007

கண்கள்

கண்கள்:

நீ
வெள்ளை வான் வெளியில்
ஒரு கருப்பு நிலா..

நீ மோசமானவன்..
நீ செய்யும் சித்து விளையாடிற்க்கு,
தண்டனை அனுபவிப்பது இதயம்...

நீ மட்டும் இல்லையென்றால்
காதலுக்கும்,காதலர்களுக்கும்
"இடம் காலி இல்லை" என முடக்கி விடப்பட்டிருப்பார்கள்..

நீ வேகமாக பயிலும் மாணவன்..
காதலர்களிடம் இருக்கும்போது மட்டும்
எப்படி குறுகிய காலத்தில் நடனம் கற்றுக்கொள்கிறாய்??
ஓரக் கண்களால் பார்ப்பதும்.
.கண்களில் ஜாடை சொல்வதும்..
உதடுகள் பேச மறுக்கும் போது நீ பேசும் பாஷையும்..
அப்பப்பா..
காதல் என்னும் ஆட்சியில்
நீ தான் ஆட்சி மொழி என
அறிவிக்கப் படாதது மட்டுமே குறை..

நீயும்,வானமும் ஒன்று தான்..
கருமேகங்கள் ஒன்று சூழ மழை..
இதயத்தின் ரணங்கள் ஒன்று சூழ கண்ணீர்..

உன்னிடம் சில கேள்விகள்..??

கேள்வி:
ஒரு துளி கண்ணீரில் எத்தனை அளவு சோகத்தை வெளியேற்றுகிறாய்??

பதில்:
ஒரு பிடி சர்க்கரையில் எத்தனை இனிமை உள்ளது என அளவிட முடியுமா உன்னால்??உணரத் தானே முடியும்??அது போலவே கண்ணீரும்..
வெளியேறும் காயத்தின் அளவை உணரத்தான் முடியும்..

கேள்வி:
உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் உன்னால் கண்ணீரில் வெளியேற்றி விட முடியுமா??

பதில்:
உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம்கண்ணீரில் வெளியேற்றியிருந்தால் என்றோ உலகம் கண்ணீரில் கரைந்து அழிந்திருக்கும்..

No comments: