Saturday, March 3, 2007

ஜாதி

மனிதனின் பரிணாம வளர்ச்சியின்
முதல் பரிணாம வீழ்ச்சி ஜாதி..

தேன் குடிக்கும் தேனீக்கள் பார்ப்பதில்லை
பூக்கள் என்ன ஜாதி என்று..

ஒளி கொடுக்கும் சூரியன் பார்ப்பதில்லை
ஜீவராசிகள் என்ன ஜாதி என்று..

பால் வண்ண ஒளிவீசும் சந்திரன் பார்ப்பதில்லை
உயிர்கள் என்ன ஜாதி என்று..

எங்கேயும் கேட்டதுண்டா
முதலியார்களுக்கு ஒரு கை ஒரு கால்
மட்டுமே படைக்கப்படுமென??
மனிதனைப் படைக்கும் இறைவனே பார்ப்பதில்லை
மனிதன் என்ன ஜாதி என்று..

இவை மனிதனுக்கு மனிதனே இட்டக் கோடுகள்..
இக்கோடுகள் உள்ள வரை ஜாதிகள் இருக்கும்..
ஜாதிகள் இருக்கும் வரை வன்முறை நிலைக்கும்..
வன்முறை நிலைக்கும் வரை மனிதம் பிறக்காது..
மனிதம் பிறக்கும் போது மனிதன் இருக்க மாட்டான்..

அப்போது உறக்கச் சொல்லுங்கள் நீங்கள் எந்த ஜாதி என்று..
கேட்க வெறும் வெற்று பூமி மட்டுமே இருக்கும்..

No comments: