Friday, June 1, 2007

காதல் வலி..

உயிரைக் கொல்லும்
அம்பு அவள் கண்களில்
இருந்து வெளியேறியது என அன்று நான் கண்டிருக்கவில்லை..

காதல் வர்ணங்கள் பல
சேர்த்து பூசும்,
இறுதியில் நிலைப்பது
ஒரே வண்ணம்
நிழல் வண்ணமே !!

ஆசை வார்தைகளும் ,
ஜாடை பேச்சுக்களும்
காதலை சொல்ல எனை உந்த
"ச்சீ நீ இப்படிப்பட்டவனா? என்னும்
சொல்லின் முடிவில் என் மனம் நொந்தேன்..

காதல் நாடகத்தில் ஒப்பனை கலைத்துச் செல்வாள் அவள்..
அவள் போகையில்
என் ஒப்பனை மட்டும் அல்ல
என்னை நானே கரைத்து ,கலைத்து கொல்வேன்
என் கண்ணீரில்..

பார்க் பெஞ்சிலும் ,கடற்கரையிலும்
காதல் மமதையில் கழித்தபோது
காவலாளி சொல்வான்
"சீக்கிரம் வெளியேறு" என்று
அது காதல் வலியில் இருந்து தப்பிக்க
சொலப்பட்ட எச்சரிக்கை பலகை என அறிந்திருக்கவில்லை
இது என் திருமண பத்திரிக்கை என நீ கொடுக்கும் வரை..

உலகில் உள்ள ராமனை எல்லாம்
கண்ணனாய் மாற்றிக்கொண்டிருக்கும்
காலம் இது
காதல் இது..

ஆர்பாட்டமாகவும் ,
ஆராவாரத்துடனும் ,
தொடங்கிய என் காதல்
அமைதியாகவும்
அழகாகவும்
முடிந்தது
அவள் திருமணத்தில்..

No comments: