Monday, June 4, 2007

வறண்ட தேசம் ..

இப்ப கம்ப்யூட்டர் ,மென்பொருள் எல்லாம்
கடை வீதி பொருளாச்சு..
அரிசியும்,கோதுமையும்
கண் காணா பொருளாச்சு..

நெலத்துக்கு பாய்ச்ச தண்ணீ இல்ல,
நா வறண்டு போகும் என் நெலத்தப்பாத்து
என் கண்ணீர தான பாய்ச்சனும்..

சொந்த பந்தம் எல்லாம் பொலப்புக்கு
வேற ஊரு போக..
என்ன பெத்த ஆத்தா இந்த ஊரு
அத விட்டு போக நான் என்ன பட்டணத்து
கம்ப்யூட்டர் மனுஷனா??

கஷ்டமுனா ,சந்தோஷமுனா
சொந்தமுனு சொல்லிக்க ஆயிரம் பேர் இருந்தாங்க..
இனி என் புல்லைங்களும் தூரத்து சொந்தமா மாறிடுமோனு
பயம் வந்துடுச்சு..

தொழிற்சாலையெல்லாம்
ஊருக்குள்ள காலடி எடுத்து வெக்க
மரமெல்லாம் மிதிச்சு கொன்னுபுட்டீங்க..
அந்த கோவத்த தான் சூரியன் காட்டுதுனு
உனக்கு வெலங்கலயா??


அந்தி சாயிர நேரத்துல
ஆலமரம் கீழ தலை சாய்வேன்,
அது காத்தோட , தாலாட்டு பாட
கண் அசந்து நான் தூங்குவேன்..
இனி என் புல்லைங்களுக்கு
காத்து வாங்கவும் காசு கொடுக்கனுமோ??

இனி
தாய்பாலும்,
தாலாட்டும்
தடம் தெரியா வார்த்தையா போனாலும்
ஆச்சர்ய பட இங்கு இல்ல..

அணை கட்ட வந்தவங்க
அடிச்சு போட்டு போயிட்டாங்க..
பாலம் கட்ட வந்தவங்க
பள்ளம் தோண்டி தந்தாங்க..
தொழில் தொடங்க வந்தவங்க
பள்ளத்துல தள்ளியும் விட்டாங்க..
இன்னும் கொஞ்ச நாள்ல என் நாடி எல்லாம்
ஓஞ்சு போய் நான் இறப்பேன்..
அந்த 6 அடி 3 அங்குலம் ஆது என் புல்லைங்களுக்கு
முழுசா தருவீங்களா??

No comments: