Friday, June 1, 2007

கவிதை எழுதத் தான் ஆசை!!

கவிதை எழுதத் தான் ஆசை!!

கவிதை எழுதத் தான் ஆசை!!
அவளுக்காக கவிதை எழுதத் தான் ஆசை!!

முடிவெடுத்தேன்!!முனைந்தேன்!!

வெள்ளை காகிதங்கள் கண்ணாடி முன்பு!!
அருகில் சென்று விசாரித்ததில், அவளுக்கான கவிதையை விட
இவைகள் அழகாய் தெரிய வேண்டும்
என் அலங்காரமாம்!!

சற்று நகர்ந்தேன்!!
பேனாவின் ஒரு பகுதி சுவற்றில் முட்டி மோதி
தன்னை கூர்மை படுத்திக்கொண்டிருக்க!!
மற்றொறு பகுதிவானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தது,
வானத்தின் நீலம் கசிய,
அதை தன்னுள் நிரப்ப!!

ஒரு வழியாய்
சமாதானம் படுத்தி அமர்ந்தேன்,ஆயுதங்களோடு!!

உதட்டில் தமிழ் சொற்கள்
ஒன்றோடு ஒன்று
போர் தொடுக்க..
முதலில் வெளியேறி விட
வழக்காடிக் கொண்டிருந்தது!!

அவைகளுக்குள் சமரசம்
செய்து விட்டு

எழுதுகோலும்,
காகிதமும்
சங்கமித்து
கவிதை பிள்ளை பெற
முனையும் அந்த
ஆனந்த சங்கமத்தில்
என் கைகள்
என்ன எழுதவிருகின்றன
என எல்லாம் ஆவலோடு காத்திருக்க
எழுதி முடித்தேன்
என் கவிதையை

"தனுஜா" என்று
அவள் பெயரை!!

No comments: