Friday, June 1, 2007

காதல் வலி - 2

என் பேனாவிலும் காதல் வலி
,மை கொடுக்க மறந்து
குருதி கொட்டியபோது..

கைகளிலும் காதல் வலி ,
உன்னைக் காணாத நாட்களை
நாட்காட்டியில் கிழிக்கும் போது..

இதழ்களிலும் காதல் வலி ,
உன்னை உள்ளே புதைத்து
வெளியே சிரிக்கும்பொழுது..

கண்களிலும் காதல் வலி ,
நம் காதல் பாதங்கள்
பதித்த இடங்களை காணும்போது..

இதயத்தில் காதல் வலி ,
நீ என்னை விட்டு அரை அடி நகரும் முன்
என் ஒரு துளி கண்ணீர் பூமீ சேர்ந்தபோது..

புத்தி காதலித்திருந்தால்
அறிவுரை சொல்லி திருத்தியிருப்பேன்..
மனம் காதலித்து விட்டது
அவஸ்த்தையை அனுபவித்தே மாயும் ..

விரல் தொடும் தூரத்தில் இருந்த போது விளங்கவில்லை ,
இந்த காதலின் வலிமை..
விழி தொடும் தூரத்திலேனும் தெரிவாயா ,
என ஏங்கும் போது தெரிந்தது காதலின் வலிமை..

உன்னோடு இருந்த வரையில்
எல்லமே ஓர் அழகு..
இன்று அழகென்ற சொல்லும்
அவஸ்தையாய் மாறியதேன்..?

இந்த உடலில் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது என்று தெரிந்தால் ,
எடுத்து களைந்து விடுவேன்..
உடலில் எல்லா பாகத்திலும் நம் காதல் தெரிகிறதே ,
என் உடலை எரித்து விடவா??

கடவுள் கண் முன்பு தோன்ற ,
வினா ஒன்று கேட்பென்
காதலை யார் கண்டுபிடித்தது? என்று..

மனம் இறந்த இவ்வுடலில்,
என் ரத்த நாளங்களும் ஊமை ஆகிப்போகும்
தருணத்தில் ,
உனக்காய் காத்திருப்பேன்
உன் மெளன மொழியேனும் கேட்க..
வருவாயா??

No comments: