Friday, November 2, 2007

காதல் விளையாட்டு

என் நேர் விழி பார்வையும்
உன் ஓர விழி பார்வையும்
இணைந்த அந்த பாதையில்
நம் காதல் பயணம் தொடங்கியதே!!

உன்னால்,
கவிதையும்
காதலும்
இன்று கட்டித் தழுவியதே!!

உன்னை நினைத்து கரைத்த
நிமிடங்களை நினைத்து
கரைந்தே போகிறேன்..

சத்தமின்றி நுழைந்தாய்..
சலனமின்றி சாகிறேன்..

என் எழுதுகோலுக்கும்
காதலிக்க கற்றுக் கொடுத்துச் சென்றாய்..

காதல் தேவனின் மடியில் சாய்வதாய் நினைத்து,
மரண தேவனின் மடியில் மடிகிறேன்..

உன் விரல் பிடித்து நடக்க ஆசை இல்லை எனக்கு,
உன் விழி பிடித்து நடக்கவே பிரியப்படுகிறேன்..

படிக்க அமர்ந்தபோது,
என் சிந்தை எல்லம் சிதறிப்போக
சிதறிய பாகங்களில் எல்லாம் உன் முகம்..

கவிதை எல்லாம் கை வந்த கலை,
உன்னை காணும் முன்..
இப்போதெல்லாம் வார்த்தைகளும் என்னுடன்
வம்பிழுக்கின்றன,உனக்காய் மட்டுமே கவிதை எழுதிகிறேன் என்று..

நேரம் போவது அறியாது
வரம்பு மீறி நிற்கிறது என் பார்வை,
உன் அழகு முகத்தின் மீதே
உன் தந்தை அருகில் இருக்கிறார்
என்பதை கூட அறியாமல்..

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்தே
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கிறேன்
இதுதன் காதல் ஆடும் ஆட்டமோ..??

No comments: