Tuesday, August 7, 2007

ஒரு நாள் நீ.......

ஒரு நாள் நீ பூக்களை முகர்ந்து கொண்டிருந்தாய்..
அதன் மகரந்தம் உந்தன் சுவாஸத்துடன் ,
போராடி போராடி,தோற்றுப் போக கண்டேன்..

ஒரு நாள் நீ மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்தாய்..
உன் பஞ்சனை தேகம் ,
நீ உறங்கும் பஞ்சு மெத்தை எடையுடன் போட்டி போடும்..

ஒரு நாள் நீ,
என் காதோரம் சொன்ன சில வார்த்தைகள் எல்லாம்
என் நெஞ்சோரம் பச்சைக் குத்திக்கொண்டது..

ஒரு நாள் நீ
பூக்களின் மத்தியில்,
கண்ணத்தில் கை வைத்து அமர்ந்து பூக்களை ரசித்துக்கொண்டிருந்தாய்..
தேன் உரிஞ்ச வந்த பட்டாம்பூச்சீகள்
"அட இது என்னடா புது வகை பூ??
இது வரை நாம் கண்டதில்லையே??"
என முணுமுணுத்தது ,என் காதுகளிலிருந்து தப்பவில்லை

ஒரு நாள் நீ குறும்பு செய்த தம்பியரை கடிந்து கொண்டிருந்தாய்..
முதல் முறையாய் ,சிவந்த நிலவை அன்று தான் கண்டேன்..

ஒரு நாள் நீ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய்..
ஒவ்வொரு முறை நீ பக்கங்களை திருப்பும் பொழுதும்
அப்பக்கங்களின் கதறல் என் காதுகளில்..

ஒரு நாள் நீ பரமபதம் விளையாடிக்கொண்டிருந்தாய்..
தாயம் போட நீ கடவுளை வேண்டி உருட்டும் பொழுதும்
என் இதயமும் சேர்ந்து அல்லவா உருண்டது..

ஒரு முறை நீ குளித்து முடித்து தலை துவட்டிக்கொண்டிருந்தாய்..
அப்போது உதிர்ந்த தண்ணீர் துளிகள்,
அடை மழை பெய்து,இலைகளில் இருந்து ஒழுகும் இறுதி துளிகள் போல..

ஒரு நாள் நீ உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு வெளியே வந்தாய்..
ஏழு வண்ணங்களில் வானவில் காட்டாத அழகு,
உன் ஒற்றை உதட்டுச்சாயம் காட்டி விட்டது..

ஒரு நாள் நீ கல்லூரி வீதி வழியே நடந்து போய்க் கொண்டிருந்தாய்..
அறிவியல் படிக்க செல்லும் உன்னிடமிருந்து,
காதல் பாடம் படித்து கொண்டிருந்தனர் மாணவர்கள்..

ஒரு நாள் நீ என நான் எழுதிய கவிதைகள் யாவும்,
ஒரு நாள் நாம் என மாறக்கூடும் தினம்
வெகு தொலைவில் இல்லை..

1 comment:

madforluv said...

too good dude...
great...smply superb.