Tuesday, August 7, 2007

மீண்டும் மீண்டும் காதலித்தேன்..

பெண்ணே நீ கடந்து போகையில்
என் இதயம் முனுமுனுத்தது
"வெண்ணிலவை வீதியில் உலவ விட்டது யார்?"

சதையால் செய்த இதயம் கொண்டதால் தானோ
கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாய்??
இரும்பால் செய்த இதயத்திற்க்கு
நான் எங்கு போவேன்??

உன் பார்வை சொட்ட சொட்ட ,
உன்னுள்ளே மூழ்கி போனேன்..

அன்பின் மிகுதியும்,ஆயுளின் பகுதியும்
சேர்த்து தருவேன். உன் காதலுக்காக..

நிமிட முள்ளுடனும்,நொடி முள்ளுடனும்
போராடி வென்று
தினமும் உந்தன் பூ முகம் காண
காதலுடன் காத்திருப்பேன்..

அன்று நீ தவற விட்ட பேருந்தைப் பிடிக்க ஓடோடி வந்தாய்..
போர் முனையில் பூக்களெல்லாம் ஒன்றாய் என்னை
கொல்ல வருவது போலே இருந்தது..
சமாதான தூதாக என் இதயம் கொடுத்து அனுப்பினேன்..
நம் சமரச உடன்படிக்கையில் நீ கையெழுத்து இடுவது எப்போது??

உன்னை காதலிக்க வேண்டும்..
இப்போதே காதலிக்க வேண்டும்..

பவுர்ணமி இரவில்
யாரும் இல்லா தீவில்
நிலவோடு உன்னை சேர்த்து அணைத்து
நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு
காதலிக்க வேண்டும்..

மழையில் நீ நனைந்து வருகையில்
உன் தலை துவட்டி ,
உன் தலை கோதி ,
உன்னை காதலிக்க வேண்டும்..

என்னோடு கோபம் கொண்டு
விலகி போகையில்
உன்னை சமரசம் செய்து காதலிக்க வேண்டும்..

என் இதயம் உன்னை நினைத்து நினைத்து துடித்த அத்தனை கணமும்
மீண்டும் மீண்டும் உன்னை காதலித்தேன்..

No comments: