Friday, November 2, 2007

நட்பு

இல்லங்களின் விதிகளுக்கும்,
வினாகளுக்கும் அடங்கியதல்ல
நம் நட்பு..

காதல் கொடுத்த கண்ணீரை
உன் தோள்களில் துடைத்தேன்..

விதி எழுதிய தீர்ப்புகளில்
நாமும் தண்டிக்கப்பட்டோம்..

ஆம் இது பிரியும் தருவாய்..
சொந்த பந்தமெல்லாம் ஏலன பார்வை பார்க்க,
தோள் தட்டி துணை நின்றாய்..
அவர் தன் பொறாமை பார்வையின் இடையில்,
என் வெற்றிக்கண்டு
எட்டி நின்று புன்னகை பூத்தாய்..

பணம் பார்த்து வந்த பந்தம் ஆயிரம் வேண்டாமடா
என் மனம் பார்த்து வந்த உன் ஒரு சொந்தம் போதுமடா..

உயிர் கொடுப்பன் தோழன் என்பது வேண்டுமெனின் பொய்யாய் தோன்றலாம் சிலருக்கு..
உண்மையான மனம் கொடுப்பான் தோழன் என்பது நிச்சயம் உண்மை..
இன்றைய போட்டியும்,பொறாமையும் நிறைந்த இவ்வுலகில்
அவை கிடைப்பதே அரிது..

நம் நட்பிற்க்கும் கற்புண்டு..
ஆயிரம் ஆராவரத்திற்க்கும்,மகிழ்சிக்கும் மத்தியில்
என்னால் உன் பாதையும்
உன்னால் என் பாதையும்
மாறாமல் பார்த்துகொள்வோம்..

ஆயிரம் அலுவலுக்கு மத்தியில்,
ஒரு நிமிடம்,
ஜன்னல் வழியே அண்னாந்து பார்க்கும் என் பார்வை,
அப்போது கடந்து செல்லும் மேகங்களோடு
உன் நினைவுகளும் கடந்து போகும்..
அந்த ஒரு நிமிடம் போதும்
நம் நட்போடு நடை போட..

கிளையில்லா மரமொன்றும்
நிழழொன்று கொடுக்காது..
நல்மனமில்லா நட்பென்றும்
நெடுந்தூரம் நிலைக்காது..

காதலில் மட்டுமே வலி என்று சொன்னவன் காதில்
உரக்கச் சொல்,
நட்பிலும் காதல் உண்டு,
பிரிவிலும் வலி உண்டு என்று..

1 comment:

James said...

ஒரு சின்னத் திருத்தம்...

ஆயிரம் அலுவலுக்கு மத்தியில்,

என்பது

ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியில்,

என்று இருந்திருக்க வேண்டும் ;)

மிக நன்றாய் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...