Saturday, May 26, 2007

கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

கண்மணி உனக்காய் ஓர் கவிதை..

என்ன செய்து பூலோகம் வந்தாய்?
அங்கே தாடி,மதுவுடன்
பிரம்மன் புலம்புகிறானமே??

அழகான புயல் நீ ,
என் கரை கடந்து விட்டாய்..
ஆனால் இன்னும்
நனைந்து கொண்டே இருக்கின்றேன்..

வாரிவாரி கொடுத்து
செல்வந்தன் ஆகும் இத்தொழிலில்
காதலைக் கொடுத்தே
உன்னைப் பெற்றேன்..

வரம் கொடு ,
பிரித்து தைத்த அந்த
இரண்டு கருப்பு வானவில்லில்
ஓர் புள்ளியாய்யாவது இருக்க ஓர் இடம்..
உன் நதியில் ஓர்
காய்ந்த சிறகாய்..
எப்போதும் உன்னை உரசி,உன்னுடன் பயணிக்க,,

அழகின் பிறப்பிடத்தில் நீ!!
அவஸ்தையின் இருப்பிடத்தில் நான்!!
காதலின் இறப்பிடத்திலும் நான் உன்னை காதலித்துக்கொண்டே தான் இருப்பேன்!!

மாதம் ஒருமுறை
நிலவிற்க்கு விடுப்பு கொடுப்பது ,
நீ பூமியில் உள்ளாய் என்னும் துணிவிலா?

சாய்ந்து பார்க்காதே..
பனைமரமெல்லாம் கொடை சாய்கிறது பார்
உன்னை ரசிக்க!!

அவள்: சீ பொய் சொல்லாதீர்கள்

அவன்: கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!